உன்னவ் : ஜன் லோக்பால் விவகாரத்துடன் தனது போராட்டம் முடியவில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் அரசின் கல்லூரிகளுக்கிடையேயான கிஷன் மகாபஞ்சாயத் விழாவில் உரையாற்றிய ஹசாரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹசாரே பேச்சு :
ஜன் லோக்பால் விவகாரத்துடன் எனது போராட்டம் முடியவில்லை; விலக்கும் உரிமை மற்றும் திரும்ப பெறும் உரிமைக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் வரை எனது போராட்டம் தொடரும்; 2014 லோக்சபா தேர்தலுக்கு முன் 6 கோடி மக்களுக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்; எனது இந்த முயற்சிக்கு பின்னர் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேல் மக்களிடமும், நாட்டிலும் மாற்றம் வரும்; கறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்யும் மனப்பான்மை வரும்; சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் நாட்டின் விவசாயிகளிடம் எவ்வித மாற்றமும் வரவில்லை; நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே மாற்றம் வந்துள்ளது; விவசாயிகளின் நிலை மாற வேண்டுமானால் கிராம பஞ்சாயத்துக்கள் கூடுதல் உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற வேண்டும். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.
சட்டங்களில் மாற்றம் :
மத்திய மற்றும் மாநில அரசுகள், நிலம் கையப்படுத்துதல், நீர் மற்றும் வனப்பகுதிகள் கையப்படுத்துதல் ஆகியவற்றிற்கு கிராம பஞ்சாயத்துக்களின் அனுமதியை பெற வேண்டும் என சட்டங்கள் கொண்டு வர வேண்டும்; மக்கள் தங்களின் அதிகாரங்களையும், சக்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் டில்லி உள்ள பார்லிமெண்ட்டை விட மாநிலங்களில் இருக்கும் மக்களின் மன்றம் பெரியது. இவ்வாறு தெரிவித்த ஹசாரே லோக்பால் வரைவு குழுவில் மக்களையும் சேர்க்க வேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
வி.கே.சிங் பேச்சு :
முன்னதாக விழாவில் பேசிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றதாழ்வுகள் நக்சலிசத்தின் ஆனிவேராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடந்த 22 ஆண்டுகளில் நாட்டில் 270 மாவட்டங்களில் நக்சலிசத்தை பரவச் செய்துள்ளதாகவும், 2010ம் ஆண்டு சட்டீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பின் நக்சல்களை பழிவாங்குவதற்காக அரசு ராணுவத்தை பயன்படுத்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாப்பதற்காக மட்டுமே எனவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.