புதுடில்லி : இன்று காலை துவங்கிய பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் ; நான் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது அரசு உலகளாவிய பொருளாதார நிலையில் இருந்து மீள கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டில் பணவீக்கம் பெரும் கவலை தருவதாக அமைந்துள்ளது. இலங்கை தமிழர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முழு நடவடிக்கை எடுக்கும். இவர்கள் அமைதியாக வாழ வழிவகை காணப்படும் என்றும் , இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் இந்த ஆண்டு 2 அணு உலை செயல்படும் என்றும் மேலும் 2 அணு உலைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நேரடி மானிய திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் ஊழல் குறைய வழி ஏற்படும். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வரும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கிய திட்டங்கள் வரையப்பட்டுள்ளது. உணவு தானியம் உற்பத்தி, பால் உற்பத்தி, உர உற்பத்தி பல மடங்கு பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வேயில் முன்னேற்ற திட்டங்கள் கொண்டு வரப்படும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி உரையின் அம்சங்கள் :
* கிராமப்புற சுகாதாரத்திற்கு முன்னுரிமை
* உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும்
* ஒரு லட்சத்திற்கும் மேல் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது
* போலியோ இல்லாத இந்தியா என்பதில் பெருமை
* பத்தாண்டில் 10 கோடி பேருக்கு வேலை உருவாக்கப்படும்
* 2013 பல்வேறு விண்கலம் அனுப்ப ஏற்பாடு
* நடப்பாண்டி ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும்
*கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஆண்டு செயல்படும்
* கூடங்குளத்தில் மேலும் புதிதாக 2 அணுஉலைகள் நிறுவப்படும்
கடந்த ஆண்டை போலவே ஒவ்வொரு கூட்டம் துவங்கும் போதும் முன்னதாக ஒரு புதிய ஊழல் விஸ்வரூபம் எடுத்து எதிர்கட்சிகளுக்கு கையில் சாட்டையாக கிடைத்து விடும். ஸ்பெக்ட்ரம் முதல் இன்றைய ஹெலிகாப்டர் ஊழல் வரை பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து திணறி வருகிறது. இன்றைய பட்ஜெட் கூட்டம் இன்று முதல் 3 மாதங்களுக்கு நடக்கவிருக்கிறது. கடந்த ஆண்டில் வீணடிக்கப்பட்டது போலவே இந்த கூட்டமும் எதிர்கட்சியினரின் அமளியால் முறையாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் வரும் 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 27 ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் , 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
அரசு எதிர்கொள்ளும் பிரச்னைகள்:
பிரதமர் நம்பிக்கை:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னது வேளாண் உற்பத்தியை பெருக்க போறிங்களா. ஏற்கனவே விவசாயிகள் பிரதமரின் அறிவுரையைக்கேட்டு டை கட்டி பேண்ட் சர்ட் போட்டு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய போய்விட்டார்கள். அதென்ன விவசாய வளர்ச்சி 3.7 சதமாக இருக்கும் என்கிறீர்கள். நீங்கள் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்துவிட்டீர்கள், விவசாய நாட்டில் இன்னும் கொஞ்சம் விவசாய வளர்ச்சிக்கு செலவு செய்தால்தான் என்ன.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடியவர்களை பார்த்து, அனைத்து வேலைகளும் முடியும் தருவாயில் போராடுகிறார்கள். அடிக்கல் நாட்டும் போது எங்கு போனார்கள் என கேட்டும் மேதாவிகளே, இப்பொது தெரிகிறதா, இவ்வலளு பெரிய போராட்டத்தை சந்தித்த பின்னும் அதே இடத்தில மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கபடுமாம், இவர்கள் எங்கே மக்களின் கருத்துகளை மதிக்கிறார்கள்,
இபோதாவது புரிகிறதா அணு உலைகள் அமைப்பதில் கீழ்காணும் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது........
அணு உலை போல பெரிய திட்டங்களை வெளி நாடுகில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் தான் நம்மூர் அரசியல் வியாதிகளுக்கு கோடிகளில் கமிசன் கிடக்கும்.....
80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு. இதில் கைமாறும் இந்திய பணம் மொத்தம் 8 லட்சம் கோடி என்கிறது சில தரப்புகள். இப்போது புரிகிறது இந்த அரசியல் வியாதிகள் ஏன் அணுஉலைகளை வாங்குவதற்கு வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது.
நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு கமிசனாக பல கோடிகள் கிடைகிறது, இந்த கோடிகளை இந்த கேடிகள் இந்திய நாட்டில் செலவிட்டால் கூட தாங்கி கொள்ளலாம், சுவிஸ்யில் உள்ள வங்கிகளில் இந்த பணத்தை அல்லாம் படுக்க போட்டிரூக்கிண்டனர் என்பது தான் வேதனையான் விஷயம்
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு மின் களமா? ஆஹா நினைக்கயில் நெஞ்சம் பதறுகிறது. இலங்கை தமிழர்களை சிங்களவன் கொல்வது போல் கூடகுலத்தின் அணு மின் உலையின் தமிழக தமிழர்களுக்கும் உளையோ. இதுக்கு தான் இந்த பட்ஜெட் கூட்டமோ? புதுடில்லி : இன்று காலை துவங்கிய பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் .....மத்திய அரசே, ஜெர்மன் தான் இந்த உலகில் முதன் முதல் அணு மின் உற்பத்தியை துவங்கியது. இப்ப அவைகள் அனைத்தையும் 28 அணு உலைகளையும் இன்னும் ஓர் இரு ஆண்டுகளுக்குள் முழுதாக மூடி விட முழு முயற்சி மேற்கொண்டு மூடி வருகிறது. இப்ப சூரிய ஒளியில் ஜெர்மனி மின்சாரம் தயாரித்து தன்னிறைவு பெற்று வருகிறது. இப்படி நீங்கள் உங்கள் விஞ்ஞானிகள் முயற்சி செய்வதை விடுத்து மீண்டும் மீண்டும் அணு உலையை நீங்கள் திறக்க முனைவது எந்த விதத்தில் நியாயம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.