E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தொடர் குண்டுவெடிப்பு:11 பேர் பலி : ஐதராபாத்தில் பதற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 பிப்
2013
20:54
பதிவு செய்த நாள்
பிப் 21,2013 20:11

ஐதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் ஒரு பகுதியான தில்சுக் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் வணிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்க பகுதியில் இன்று மாலை 7.01 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைதொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்‌கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் ‌போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்‌சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகி‌யோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு:ஐதராபாத் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையடுத்து சென்னைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகா, மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.பி.,சிங் கூறுகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் தடயங்களை பாதுகாக்கும் விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என ‌கூறினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்‌ததை உறுதி செய்துள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா
22-பிப்-201308:36:00 IST Report Abuse
Bellie Nanja Gowder காவி பயங்கரவாதம்,என்று பேசிய உள்துறை அமைச்சர் இதற்கு என்ன சொல்ல போகிறார்? பாகிஸ்தானின் பயங்கரவாதி haffeez saiyed இவருக்கு சான்றிதழ் வழங்கியபோதே ஏதாவது நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்தது இன்று நடந்துவிட்டது. ஷிண்டேயின் காவி பயங்கரவாதம் என்ற பேச்சுக்கு தீவிரவாதிகள் நல்ல பரிசு தந்திருக்கிறார்கள் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
22-பிப்-201308:25:45 IST Report Abuse
Raj நமது அரசியல் வியாதிகள் என்றைக்கு முழு மனதுடன் தீவிரவாதத்தை எதிர்க்கிறார்களோ அன்று தான் இதற்க்கு விடிவு ... அது வரை கொலை கொலையா முந்தரிக்காதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ponniselvan - tiruvallur  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-201307:27:54 IST Report Abuse
ponniselvan ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-பிப்-201306:51:14 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பண்பாடட்ட்ற காட்டு மிராண்டிகளின்(இனிமே தீவிரவாதிகள் என்று கூறபோவதில்லை) இந்த செயல், யாருக்கும் ஏற்புடையது அல்ல. நேற்றைய குண்டு வெடிப்பிற்கு பிறகு ஆழ்ந்த வருத்தத்தில் சென்ற நான், இன்று அதிகாலை நிம்மதியுடன் தூங்கினேன், காரணம், சக பணியாளர் கிடைத்து விட்டார், அவர் எனக்கு தொலைபேசி வழியாய் தொடர்பு கொண்ட போது நிம்மதி பிறந்தது, அதன் பின்னர் அவர் கூறிய சொல் நெகிழவைத்தது, நானும் புறப்பட்டு சென்றேன், மருத்துவமனை வாசலில் கூட்டம் கண்டதும் அதிர்ச்சியுற்றேன், பல முஸ்லிம்களும் அந்த கூட்டத்தில், திரும்பி போகலாமா என்று நினைக்கயில் கூட்டத்தில் இருந்து நண்பர், இங்கே வந்து நில்லுங்கள் என்று கூறினார் , யாரும் அதிகம் பேசவில்லை, தூக்க கலக்கத்தில் எல்லோரும் , அது என்ன கூட்டம் தெரியுமா, ரத்தம் தேவைபடுவோருக்கு ரத்தம் தானம் செலுத்த வந்தோர் கூட்டம். என் சக பணியாளர் இந்திய முஸ்லிம் ஆனால் அவர் கூறியது சிந்திக்க வைத்தது. முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் இடங்களில் வந்து தங்கிகொள்ளும் பண்பாடற்றவர்களை அடையாளம் காண்பது கடினம், ஏனென்றால் அவர்கள் ஏதோ உறவு கூறிக்கொண்டு லோகல் மக்களின் பின்னே பதுங்கி கொண்டாலும் தெரியாது என்பதுதான்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
22-பிப்-201305:13:30 IST Report Abuse
Mohandhas குண்டுவைக்க, மற்றவர்களை கொல்ல ஒரு வித மனநோய் பிடித்தால் மட்டுமே தைரியம் வரும்...சாதாரண மனிதனிடம் இது இருக்காது.. இதற்க்கு பயன்படுத்தியதாக சொல்லப்படும் தொழில் நுட்பம் ( கேஸ் சிலிண்டர் என்பது ஏற்புடையது அல்ல) சாதாரண ரௌடிகளிடம் இருக்க வாய்பில்லை....
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
manoj - London  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-201302:47:07 IST Report Abuse
manoj why they didn't leave when pakistan was separated?
Rate this:
4 members
0 members
13 members
Share this comment
Cancel
சங்கத்தமிழன்,சென்னிவீரம்பாளையம். இந்திய உள்துறை அமைச்சர் அவர்கள் ஹைதராபாத்ல் குண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறோம் என்று சொல்லாமல்,இந்த சம்பவம் நடந்தமைக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க்கவில்லை என்று வெகுளியாக சொல்வது வருத்தமளிக்கிறது.
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-பிப்-201306:58:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேதெளிவான கருத்துகள், வெகுளியானது? இல்லை தோழா, அற்பத்தனமான காசுக்கு அலையும் பிச்சை காரர்கள் கூட்டத்தில் ஓட்டுகார கூட்டமும் ஒன்று ...
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
Cancel
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
22-பிப்-201301:21:39 IST Report Abuse
Rasu Kutty இதை செய்தது கண்டிப்பாக "The Religion of Peace" , அப்சல் குருவின் தூக்கிற்கு பழிவாங்க
Rate this:
4 members
0 members
21 members
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
22-பிப்-201301:02:09 IST Report Abuse
Varatharajan குண்டு வைப்பவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் ஏன் இப்படி கோழைகளாக யாரும் இல்லாத சமயம் பார்த்து, மக்கள் அதிகம் கூடும் மார்கெட், தெருக்கள் போன்ற இடங்களில் அப்பாவிகளை கொள்கிறீர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு வேண்டாதவர்கள் இருந்தால் அவர்கள் வீடுகளை தாக்கலாம் அல்லவா இப்படி அநாகரீகமாக ஒன்றும் அறியாத என்னவென்று தெரியாத மக்கள் மேல் ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்? சமிபத்தில் வெளிவந்த துப்பாக்கி படம் (விஜய் நடிகர்) நடித்த படம் போல் தான் இந்த சம்பவமும் போல் இருக்கு இன்று இறந்தவர்களின் ஆன்மா உங்களை சும்மா விடாது
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel
Karthikeyan K - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201301:02:07 IST Report Abuse
Karthikeyan K தொடர் குண்டு வைத்த எந்த நாய் இருந்தாலும்கடுமையான நடவடிக்கை மிக அவசியம்
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.