சேலம்: தமிழக சிறைகளில், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், சேலம், திருச்சி, புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழக சிறைகளில், சமீபகாலமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கைதிகள் போராட்டத்தில் குதிப்பது, தினமும் அரங்கேறி வருகிறது. இதை, தடுக்க தவறியாதாக கூறி, சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன், புதுக்கோட்டை சிறைக்கும், அங்கு பணியாற்றி கண்காணிப்பாளர் பழனி, திருச்சி மத்திய சிறைக்கும், திருச்சி சிறையில் பணியாற்றிய சுந்தர்ராஜன், சென்னை புழல் சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சிறைகளுக்குள் கஞ்சா, மொபைல்போன், அவற்றின் உதிரிபாகங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், கைதிகள் போராட்டத்தில் குதிக்காமல் இருக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.