Advertisement
ராயப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,21:01 IST

சென்னை:ராயப்பேட்டை காவல் நிலையத்தின் அருகே, வழக்குகளில் பிடிக்கப்பட்ட வாகனங்கள் சாலையோரத்திலும், நடைபாதையிலும் நிறுத்துப்பட்டிருப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ராயப்பேட்டை காவல் நிலையம் உள்ளது. போலீசார், போதை பொருட்கள் கடத்தும் வாகனங்கள், திருட்டு வாகனங்கள், விபத்துகளை ஏற்படுத்திய வாகனங்கள், கொலை வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் என, பல வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
இவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், காவல்
நிலையம் அருகே நடைபாதையிலும், சாலையோரத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், இப்பகுதியில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வழக்குகள் தொடர்பாக, போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்தி வைக்க, போதிய இடவசதி இன்மையால், ஒன்றுக்கு மேல் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் பராமரிப்பற்ற நிலையில் கிடக்கின்றன.
இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் ஒருவர் கூறியதாவது:
திருட்டு வண்டிகள், கொலை வழக்கில் தொடர்புடைய வண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது, வாகனத்தின் விவரங்களை மட்டும், எடுத்து கொண்டு, வாகனங்களை காவல் நிலையத்தில் பராமரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடும். தற்போது காவல் நிலையத்தில், போதிய இடவசதி இல்லாததால், வெளியே நடைபாதையில் நிறுத்தி வைத்துள்ளோம்.
இவ்வாறு பேலீஸ்காரர்
கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ப்ரீடம் - Chennai,இந்தியா
22-பிப்-201310:14:05 IST Report Abuse
ப்ரீடம் ஐயா, கொஞ்சம் ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன் கூட பாருங்க. இதே நிலை தான். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியிலிருந்து அரசாங்க அலுவலங்கங்களை வேறு இடத்திற்கு மாற்றி smooth trafficக்கு வழி வகுக்கலாமே? அப்படியே, கொஞ்சம் சாந்தோம் பக்கமும் பாருங்கள் - லைட் ஹவுஸ் to பட்டினப்பாக்கம் வரை - எப்போதும் traffic.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.