கருணாநிதி மீது அவதூறு வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தமிழக அமைச்சர், அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, ஒரு, வார இதழில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், தி.மு.க., பத்திரிகையான, "முரசொலி'யில், கருணாநிதியின் கேள்வி - பதில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, கருணாநிதி, பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது, அவதூறு வழக்குகளை, அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் சார்பில், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். கருணாநிதி மற்றும் செல்வத்துக்கு எதிராக, இவ்வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவில், "பத்திரிகையில் வெளியான செய்தியில், எந்த அடிப்படையும் இல்லை; அவதூறு செய்யும் நோக்கில், செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, சட்டப்படி, கருணாநிதி மற்றும் செல்வம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சிவபதி, பச்சைமால் உள்ளிட்ட அமைச்சர்கள், கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iniyan - Trichy,இந்தியா
23-பிப்-201301:13:16 IST Report Abuse
iniyan அவதூறு வழக்குப்போடுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை தமிழ் நாட்டின் நலனில் அக்கறை செலுத்தினால் ஆட்சியாளருக்கு நல்லது. மக்களின் மீது கவனம் இல்லாமல் இப்படி இருந்தால் நாளை பிரதமர் ஆவது எப்படி, சீக்கிரமே இப்ப இருக்கும் பதவிக்கும் வேட்டுதான்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
22-பிப்-201310:19:59 IST Report Abuse
Rangarajan Pg நீதிமன்றங்களில் பல வருடங்களாக தேங்கி கிடக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கு வராமல் அந்த வழக்கின் வாதி பிரதிவாதிகளின் வாழ்கை தான் காலாவதி ஆகி கொண்டிருக்கின்றன. ஆனால் முடிவு வந்த பாடில்லை. ஏற்க்கனவே நீதிமன்றங்களின் செயல்பாடு மந்தமாக இருக்கிறது. மேலும் இதை போன்ற அரசியல் காழ்புணர்ச்சி வழக்குகள் மேலும் மேலும் போட்டு கொண்டே போனால் நீதிமன்றம் இதை போன்ற வழக்குகளினால் நிரம்பி வழிந்து விடும். நீதிமன்றங்களும் இந்த வழக்குகளை முடிக்க போவதில்லை. இதனால் வக்கீல்கள் தான் கொழுத்து கொண்டிருக்கிறார்கள். அப்பாவி பொது மக்கள் நீதியின் மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றம் சென்று தங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். சேர்த்து வாய்த்த பணத்தையும் வக்கீல்களுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை போய் மக்கள் எல்லோரும் வெளியே சமரசம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். பிறகு கட்டபஞ்சாயத்து, ரௌடியிசம் தலை தூக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sankar Pillai - kovilpatti,இந்தியா
22-பிப்-201310:00:00 IST Report Abuse
Sankar Pillai வாய மூடிகிட்டு இருந்தால் வழக்கு ஏன் பாய போகிறது .தினம் ஒரு அறிக்கை கொடுத்தல் வழக்கு வராம அதிக அறிக்கை கொடுத்த தானை தலைவருன்னு பட்டமா கொடுப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
22-பிப்-201308:47:03 IST Report Abuse
PRAKASH கேஸ் போடுற உங்களால கேஸ் எப்போ முடியும்னு சொல்ல முடியுமா ??? சுத்த டைம் வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-பிப்-201306:23:53 IST Report Abuse
villupuram jeevithan கருணாவை பாராட்ட வேண்டும், இம்மாதிரி அவதூறு வழக்குகளை கோர்ட்ட்க்கு எடுத்துச் செல்வதில்லை. ஆனால் அவருக்கென்று ஒரு பாணி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
singaravelu - thiruvarur ,இந்தியா
22-பிப்-201305:08:40 IST Report Abuse
singaravelu கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை...ஆண்டவர் பேசவும் எழுதவும் , ஆளுவோர் வழக்குப் போடவும் சவால் விடவும் .....பத்திரிகையாளர் செய்திகள் ஆக்கவும் மக்கள் சேவையில் யார் முந்தி எனப் போட்டி போடவும் ....ஆஹா... என்ன ஒரு வெளிப்படை...? நடக்கட்டும் இப்படியே...நாடு விளங்கி விடும்...மக்கள் மகிழ்ந்து விடுவர்....
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
22-பிப்-201302:29:43 IST Report Abuse
Ambaiyaar@raja நாஞ்சில் சம்பத் மீது 55 வழக்கு இருந்தது அதில் ஆஜராகாமல் இருக்கவே அவர் ஜெயாவிடம் சென்று சேர்ந்து அந்த வழக்கை எல்லாம் வாபஸ் பெற வைத்தார். அது போல போற போக்கை பார்த்தால் கருணா அவர்கள் மீதும் விஜயகாந்து மீதும் இன்னும் பல வழக்கு போட்டு ஆஜராக முடியாமல் ஜெயா கட்சியில் சேர்ந்தாலும் சேர்ந்து விடுவார்கள் இருவரும். இந்த மாதிரி அரசியல் காழ்ப்பு வழக்குகளை நீதி மன்றம் எடுக்கவே கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் மக்களின் வரி பணம் தான் வேஸ்ட் நீதி மன்ற நேரமும் வீண்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-201301:11:59 IST Report Abuse
தமிழ்வேல் அப்படி என்னதான் அவதூறாக கூறினார் என்று எழுதினால் என்னவாகிவிடப் போகின்றது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்