சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தளி தொகுதி எம்.எல்.ஏ., ராம சந்திரன், அவரது உறவினர்கள் உள்ளிட்ட, 17 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட, பெரியார் திராவிடர் கழக நிர்வாகி, பழனிசாமி என்பவர், கடந்த ஆண்டு, ஜுலை மாதம், படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தளி தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராம சந்திரன் உள்ளிட்டோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, ஜூலை, 30ம் தேதி, திருவண்ணாமலை கோர்ட்டில், ராம சந்திரன் சரணடைந்தார். பின், ராம சந்திரன் மீது, கிரானைட் முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ராம சந்திரனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ராம சந்திரனின் மாமனார் லகுமையா, அவரது சகோதரர் வரதராஜன், உறவினர் கேசவன் உள்ளிட்ட, 16 பேரும், குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் மாதம், வெவ்வேறு தேதிகளில், இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி கலெக்டரின் உத்தரவுகளை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 17 பேரின் உறவினர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் பாஷா, தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம், வழக்கறிஞர் ஜெகதீஷ் சந்திரா ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்', "குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கான உத்தரவுகள், மனதை செலுத்தாமல், இயந்திர கதியில், பிறப்பிக்கப்பட்டுள்ளன. வலுவான, நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இவைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.