சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க., "மாஜி' அமைச்சர் ஆஜர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க., "மாஜி' அமைச்சர் ஆஜர்

Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க., "மாஜி' அமைச்சர் ஆஜர்

மதுரை: சொத்து குவிப்பு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ., வுமான தங்கம் தென்னரசு, மதுரை ஊழல் தடுப்பு விசாரணை கோர்ட்டில், நேற்று ஆஜரானார்.
விருதுநகர், காரியாபட்டி மல்லாங்கிணறை சேர்ந்த தங்கம்தென்னரசு, கடந்த தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தார்; தற்போது, திருச்சுழி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவர் பொறுப்பு வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, புகார் எழுந்தது. தங்கம் தென்னரசு, மனைவி மணிமேகலையிடம், விருதுநகர் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இருவரிடமும், 74 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, மதுரை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க, நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.நேற்று, மதுரை கோர்ட்டில் ஆஜரான தங்கம் தென்னரசு, ஜாமின் பெற்றார். சம்மன் கிடைக்காததால், அவரது மனைவி ஆஜராகவில்லை. மணிமேகலைக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, பிப்., 27 க்கு தள்ளி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை