சேலம்: சேலம் - கரூர் அகல ரயில் பாதையில், நேற்று, அதிவேக ரயில் முன்னோட்டம் விடப்பட்டது. சேலத்திலிருந்து புறப்பட்ட ரயில், ஒரு மணி நேரத்தில் கரூரை சென்றடைந்தது.
சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி, 1997-98ல் துவங்கப்பட்டது. 690 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. சரக்கு போக்குவரத்து நடந்து வரும் சூழலில், பயணிகள் ரயில் சேவை துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனைக்கு முன், அதிவேக ரயில் முன்னோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, நேற்று காலை, கட்டுமானப் பிரிவு, தலைமை பொறியாளர் மற்றும் துணைத் தலைமை பொறியாளர் (சேலம் கோட்டம்) குழு தலைமையில், அதிவேக ரயில் சோதனை துவங்கியது. இரண்டு பெட்டிகளுடன் கூடிய ரயில், காலை, 9:15 மணிக்கு, சேலம் ஜங்ஷனில் இருந்து கிளம்பியது. காலை, 9:50க்கு நாமக்கல்லுக்கும், 10:20க்கு கரூர் ரயில் நிலையத்துக்கும் சென்றடைந்தது. இடையில், மூன்று இடங்களில், ஆய்வுக்காக ரயில் நிறுத்தப்பட்ட நிலையிலும், 1:05 மணி நேரத்தில் கரூர் சென்றதால், சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது.
இதுகுறித்து, தலைமை பொறியாளர், கண்டேல்வால் கூறியதாவது: சேலம் ரயில்வே கோட்டத்தில், மிகப் பெரிய திட்டமாக, சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் அமைந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதமும், அதிக நிதியும் செலவாகியுள்ளது. நிலத்துக்காக மட்டும், 150 முதல், 200 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இப்பாதையில் பயணிகள் ரயில் சேவை தொடங்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம், பிப்., 25, 26, 27 தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, அதிவேக ரயில் முன்னோட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.