Advertisement
தமிழக - கர்நாடகா இடையே தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013,00:08 IST

ஓசூர்: ஓசூரில் இருந்து பெங்களூருக்கு, நேற்று, இரண்டாவது நாளாக, தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை; தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் கர்நாடகா அரசு பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களில், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மத்திய அரசை கண்டித்து, நேற்று முன்தினம் நாடு முழுவதும், பா.ஜ., மற்றும் தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலத்தில், பா.ஜ., ஆளும்கட்சி என்பதால், அம்மாநிலத்தில் பஸ்கள், முற்றிலும் ஓடவில்லை; தமிழக பஸ்களும், கர்நாடகாவுக்கு இயக்கப்படவில்லை. ஓசூர் வழியாக, பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள், பொதுமக்கள், பெங்களூரு செல்ல முடியாமல், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தவித்தனர். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதால், கர்நாடகாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க, தமிழக, கர்நாடகா எல்லையில், இரு மாநில போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக, தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கர்நாடகா அரசு பஸ்கள், குறைந்த எண்ணிக்கையில், ஓசூர் - பெங்களூரு, ஓசூர் - ஆணைக்கல், ஓசூர் - மாலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கின. இந்த பஸ்களில் நிற்க கூட முடியாமல், நெரிசலில் பயணிகள் பயணம் செய்தனர். சில தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பெங்களூரு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசு பஸ்கள், பெங்களூருக்கு இயக்கப்படாததால், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் மூலம், பெங்களூரு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Loganathan - Madurai,இந்தியா
22-பிப்-201307:55:54 IST Report Abuse
Loganathan கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் கர்நாடகத்தில் பதிவு செய்ய பட்டவை.அதனால் தடை இன்றி இயக்க படுகிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.