பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு அருள்பாலிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு அருள்பாலிப்பு

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு அருள்பாலிப்பு

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் மாசிமக உற்சவத்தில், பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனி வருக்கு அருள்பாலித்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், விபசித்து முனிவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, 6ம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 11:15 மணிக்கு பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விநாயகர் மூஞ்சூரு வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை பழமலை நாதர் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை