மூணாறு: பொது வேலை நிறுத்தத்தையொட்டி, மூணாறில் நேற்று வாகனங்கள் வழி மறிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஓட்டல்கள் திறக்கப்படாததால் உணவு கிடைக்காமல் திண்டாடினர். அனைத்து தொழிற் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தால், மூணாறில் நேற்று முன்தினம் கடைகள் மூப்பட்டிருந்தன. சுற்றுலா வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று நடந்த போராட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர். வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் வழி மறிக்கப்பட்டன.
நகரில் கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், போஸ்ட் ஆபீஸ் ஜங்சனில் உள்ள பாலத்தில், கட்சியை சேர்ந்த தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், காங்., கேரள மாநில துணைத் தலைவர் மணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வாகனங்களை மறித்தனர்.
அவர்களிடம், மூணாறு டி.எஸ்.பி.,சஜி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, வாகனங்கள் செல்ல வழி செய்தனர். இதே போல், ஆங்காங்கே வாகனங்கள் வழி மறிக்கப்பட்டதால்,சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இரண்டு நாட்களாக ஓட்டல்களும் மூடப்பட்டதால், உணவு கிடைக்காமல் சில சுற்றுலா பயணிகள் திண்டாட நேரிட்டது.நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தயார் செய்த மதிய உணவை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் சாப்பிட்டு பசியை போக்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.