புதுச்சேரி: அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு, அரவிந்தர் ஆசிரமத்தில் அவர் பயன்படுத்திய அறை வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்த மீரா அல்போன்சா, அரவிந்தர் ஆசிரம அன்னை என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அரவிந்தரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, 1914ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, புதுச்சேரிக்கு வந்தார்.
மனித குலத்தின் நன்மைக்காக, அரவிந்தருடன் இணைந்து பணியாற்றிய அன்னை, 1968ம் ஆண்டில், புதுச்சேரி அருகே, சர்வதேச நகரான ஆரோவில்லை உருவாக்கினார். அன்னையின் பெருமுயற்சியால்தான், புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. அன்னை பிறந்த தினத்தன்று, அவர் பயன்படுத்திய அறைகள், பொருட்கள் மற்றும் அவரது சமாதி பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுவது வழக்கம். அன்னையின் பிறந்த நாளான நேற்று அவரது சமாதி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், அன்னையின் சமாதி மற்றும் அவர் அறை உள்ளிட்டவைகளைத் தரிசனம் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.