போராட்ட களத்திற்கு தயாராகிறது தே.மு.தி.க., தலைமை*கட்சியினரை கட்டுக்கோப்பாக வைக்க வியூகம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

விஜயகாந்த் மீது, தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தும், மிகப்பெரிய போராட்டத்திற்கு, தே.மு.தி.க., தலைமை தயாராகி வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும், தே.மு.தி.க.,வில் கோஷ்டிபூசல் அதிகரித்துள்ளது. மாவட்ட செயலர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளால், பல்வேறு மாவட்டங்களில், மற்ற நிர்வாகிகள், தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.பிரச்னையே வேண்டாம் என்று கருதி, பல நிர்வாகிகள், தங்கள் பதவிகளை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
கட்சி விழாக்கள், போராட்டங்களில் பங்கேற்பதையும் அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், கட்சி தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்வற்றிற்கு செலவுகளை பகிர்ந்து கொள்ள முடியாமல், மாவட்ட நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
சிதறல்: பல மாவட்டங்களில், கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு, நிர்வாகிகளை நியமிக்காத நிலையும் நீடித்து வருகிறது. தனித்து போட்டியிட்ட காலங்களில் ஒற்றுமையாக இருந்து போராடிய, தே.மு.தி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் சிதறி கிடப்பது கட்சி தலைமைக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளை, தே.மு.தி.க., தலைமை, மிக ரகசியமாக செய்து வருகிறது. அதே நேரத்தில், தேர்தலுக்குள் கட்சியினரை கட்டுக்கோப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய, இக்கட்டான நிலைமையும், அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம், சென்னை வானகரத்தில் நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழுவில், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், பூத் ஏஜன்டுகளை நியமிக்க வேண்டும் என, அப்போது, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுக்குழு முடிந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், அதற்கான பணிகளை, மாவட்ட செயலர்கள் இன்னும் துவங்காமல் உள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமை, மாவட்ட செயலர்களிடம் காரணம் கேட்டால், மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர் என, புகார் கூறி வருகின்றனர்.
தனிக்குழு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், கோஷ்டி பூசலை சமாளிப்பதற்கான, தனிக்குழுவை நியமிக்க, அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., பாணியில், லோக்சபா தேர்தல் ஆய்வுக்கு செல்லவுள்ள இக்குழுவினர், கோஷ்டி பூசலை களைவதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே, கட்சியினரை ஒருங்கிணைக்கும் வகையில், மிகப்பெரிய போராட்டம் நடத்தவும், அக்கட்சி தயாராகி வருகிறது. விஜயகாந்த் மீது, அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தும், இப்போராட்டம் நடக்கவுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நிர்வாகிகள் சிலர், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், மாநாடு நடத்த வேண்டும் என்றும், இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வத்தோடு வருவரா என்ற சந்தேகமும் கட்சி தலைமைக்கு எழுந்துள்ளது. அதனால், ஒரே மாதத்தில் வாரத்திற்கு ஒரு இடம் வீதம், நான்கு இடங்களில் மிகப்பெரிய போராட்டம் நடத்த, அக்கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjaithamilan - QATAR,இந்தியா
24-பிப்-201311:38:18 IST Report Abuse
Thanjaithamilan Ambaiyaar@ராஜா, VAIAKANNU BOOPATHY , Samy Chinnathambi - இவர்களுக்கு ஒன்று சொல்லிகொள்ள ஆசை படுகிறேன். வைகோ என்பவர் கையிலெடுக்கும் ஒவொரு பிரச்சனையும் பொதுவான பிரச்சைதான். அவரின் நடை பயணம் முக்கியமான ஒரு நல்ல விசயமாகத்தான் இருக்கும். அவருக்கு யாரும் சொல்லிகொடுக்க வேண்டியது இல்லை. எனக்கு தெரிந்தவரை அவரின் கட்சியில் இருபவர்களும், நிறைய காசு உள்ளவர்கள் போலவும் தெரியவில்லை. அவரின் கொள்கைக்கு மட்டுமே அவரின் கூட இருப்பவர்கள். அவரின் கட்சியை உடைக்க, அவரின் கட்சி ஆட்களை சிதறசெய்ய இரு திராவிட கட்சிகளும் முயன்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே அவர் ஒரு தனி நபர் ஆர்மி போன்றவர். நிச்சயம் எலெக்சன் நேரத்தில் நல்ல முடிவு எடுக்கும் அரசியல் அனுபவம் மிக்கவர். அதனால் அவரை விசி காந்துடன் ஒப்பிடாதீர்கள். வைகோ வழி (வலி) தனி வழி.
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
23-பிப்-201321:39:14 IST Report Abuse
Raju Rangaraj 2022 ல் தேமுதிமுக ஆட்சி புரிய பா.ம.க எதிர்க்கட்சி வரிசையில் அமர அதிமுக திமுக கூட்டணி ஏழெட்டு எம்எல்.ஏக்களுடன் தடுமாற எடுத்ததற்கெல்லாம் வெளி நடப்பு செய்ய கோட்டைக்கு வெளியே காவாலாளிகள் கொண்டு போய் விட மீண்டும் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி உள்ளே வரஅகா ஆகா இப்படி ஒரு கனவிம்னை நேற்று இரவு கண்டேன் ....பலிக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
23-பிப்-201300:42:05 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே மேக்கப் சரியில்ல விஜயராசு, பயமா இருக்கு, ஒரு வேலை ஐதராபாத் வந்துட்டு போனீங்களா?
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
22-பிப்-201310:02:26 IST Report Abuse
P. Kannan நாம எப்படியோ அப்படியே கட்சிகாரனும். எல்லா விஷயங்களும் ஆரம்பிப்பது தனிமனிதனிடம் தான். நாம் நல்லபடியாக இருந்தால் எல்லாம் நல்ல படியாக இருக்கும். நாம ஆரம்பத்தில் குடும்ப கட்சி என்ற வாதத்தை வைத்து அரசியல ஆரம்பித்தோம், அதே போன்ற கருத்துடையவர்கள் பின்னால் வந்தார்கள், பின் இங்கேயும் மனைவி , மச்சான், மகன் என்று பதவிகொடுக்கும் போது ஏமாற்றப்பட்டோம் என்று பின்வாங்குகிறான். கட்சியை வளர்க்கவேண்டும் அப்போதான் கூட்டணி தேடிவரும். இல்லை என்றால் அனாதையாவோம்.
Rate this:
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
22-பிப்-201309:59:01 IST Report Abuse
S  T Rajan வைகோ அம்மாவுடன் சேர்த்தால்தான் நல்லது.....விஜயகாந்த் ஒரு வெத்து வேட்டு ..... அ. தி.மு.க, ம.தி.மு. க மற்றும் இரண்டு கம்முநிஸ்ட் சேர்ந்து போட்டி போட்டால் நிச்சயம் வெற்றி வைப்பு உண்டு....இவர்களுடன் பி.ஜே.பி. சேர்ந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
22-பிப்-201309:55:14 IST Report Abuse
m.s.kumar விஜயகாந்தை விசயம் இல்லாத காந்த் என்று எல்லோரும் சொல்கிறிங்க ஆனா , அவர் தான் தமிழ்நாட்டின் தவிர்கமுடியாத அரசியல் சக்தியாக ஏற்றும் பெறுவார் . காலம் நல்ல பதிலை தரும் .
Rate this:
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
22-பிப்-201309:19:20 IST Report Abuse
KKsamy அது ஒன்னும் இல்ல சாமீ... பூனை கண்ண முடிகிசுன்னா பூலோகம் இருண்டு போச்சி என்று நினைசுக்குமாம்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
22-பிப்-201308:54:27 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் நீங்க எங்க வேணாலும் போராட்டம் நடத்துங்க , எப்படி வேணாலும் போராட்டம் நடத்துங்க... ஆனால் தமிழின துரோகி திமுக உடனோ , காங்கிரஸ் உடனோ கை கோர்த்தல் உங்கள் கடையை காலி செய்ய வேண்டியது தான்... நானே உங்களுக்கு முதல் எதிரி.. :(
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
22-பிப்-201308:43:54 IST Report Abuse
Nandu இப்போதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு, தனிப்பட்ட முறையில் தங்களுக்கு என பிரச்சனைகள் வந்த பின்புதான் நாட்டுப் பிரச்சனைகள் நினைவுக்கு வருகிறது... தங்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி நாட்டுப் பிரச்சனைகளை சேர்த்து போராட ஆரம்பித்து விடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
22-பிப்-201308:41:43 IST Report Abuse
PRAKASH வைகோ அம்மாவிடம் சரணாகதி >>>> விஜயகாந்த் தாத்தாவிடம் சரணாகதி >>>
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்