பெங்களூரு: கர்நாடகாவில், பா.ஜ., முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து, நேற்று இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். முதல்வர் ஷெட்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். கர்நாடகாவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசில் அமைச்சராக இருந்த, புட்டசாமி, கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின், பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்களான உதாசி, ஷோபா ஆகியோர், அமைச்சரவையிலிருந்து விலகினர். விலகியதும், எடியூரப்பாவின், கே.ஜே.பி., என அழைக்கப்படும், கர்நாடகா ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்த சூழ்நிலையில், அமைச்சர்கள் ராஜு கவுடா, ஆனந்த் அஸ்னோதிகர், பச்சே கவுடா, சோமண்ணா ஆகியோர், காங்கிரசில் சேர, "பேரம்' பேசி வந்தனர். இவர்களில், சிறு தொழில்கள் துறை அமைச்சர், ராஜு கவுடா, வனத்துறை அமைச்சர், யோகேஸ்வர் ஆகியோர், காங்கிரசில் சேர, "பச்சை' கொடி காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, அவர்கள் இருவரும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். பா.ஜ., - எம்.எல்.ஏ., பதவியில்இருந்தும் ராஜினாமா செய்ய முடிவு செய்த அவர்கள், ராஜினாமா கடிதங்களை, சபாநாயகர் போப்பையாவிடம் கொடுக்கவுள்ளனர். இவர்கள் இருவரும், விரைவில், காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி, உமேஷ் கட்டி உட்பட, மேலும் சில அமைச்சர்களும், விரைவில் ராஜினாமா செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா அமைச்சரவையில், இதுவரை நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில், இருவர், கே.ஜே.பி.,யில் இணைந்துள்ளனர். இருவர், காங்கிரசில் இணைகின்றனர். இதனால், பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, 225. இதில், 18 இடங்கள் காலியாக உள்ளன. பா.ஜ.,வின் பலம், 103 ஆக குறைந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.