கொச்சி: சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், சிறப்பு கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட, 35 பேரில், காங்கிரஸ் பிரமுகர் உட்பட, 14 பேருக்கு, கேரள ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. கேரளா, இடுக்கி மாவட்டம், சூரிய நெல்லி கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி, 1996ல் கடத்தப்பட்டு, வெவ்வேறு இடங்களில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 42 பேர் மீது, வழக்கு பதியப்பட்டது. இவர்களில், ஒருவர் இறந்து விட்டார்; இரண்டு பேர் தலைமறைவாகினர். மீதமுள்ள, 39 பேருக்கு எதிராக, வழக்கு நடந்தது. இந்த வழக்கில், 2000 செப்டம்பர், 6ம் தேதி, தீர்ப்பு வழங்கிய, கோட்டயம் சிறப்பு கோர்ட், 35 பேருக்கு தண்டனை விதித்தது; நான்கு பேரை விடுவித்தது. தண்டனை பெற்ற, 35 பேரும், தீர்ப்பை எதிர்த்து, கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், 35 பேரையும் விடுவித்தது. அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆரம்பத்தில் தலைமறைவான இருவரில் ஒருவரான, வழக்கறிஞர் தர்மராஜனே குற்றவாளி என, தீர்ப்பளித்தது.
சிறப்பு கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்ட, 35 பேர், ஐகோர்ட்டில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மாணவி தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட, 35 பேரில், காங்கிரஸ் பிரமுகர், ஜேக்கப் ஸ்டீபன் என்பவர் உட்பட, 14 பேர், கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, எங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, ஐகோர்ட்டில் மீண்டும் நடைபெறவுள்ளது. அந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, எங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, கோரியிருந்தனர். மனுவை விசாரித்த, கேரள ஐகோர்ட், 14 பேருக்கும், ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இவர்களில் பலருக்கும், சிறப்பு கோர்ட், 13 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.