புதுடில்லி : ரயில்வே அமைச்சராக பவன்குமார் பன்சால் பதவியேற்ற பின், முதன் முறையாக வரும், 26ம் தேதி சமர்ப்பிக்கவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், 100 புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. வரும், 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாக உள்ளது. புதிய ரயில்கள் தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளதால், ரயில்வே பட்ஜெட்டில், 100 புதிய ரயில்களை இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இவற்றில், பெரும்பாலான ரயில்கள், வட மாநிலத்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். இது தவிர, பழைய ரயில் பெட்டிகளை மாற்றவும், புதிதாக இயக்கவுள்ள ரயில்களுக்காகவும், 4,200 ரயில் பெட்டிகளை தயாரிப்பது மற்றும், 670 ரயில் இன்ஜின்களை தயாரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும். இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.