குஜராத் போலி, "என்கவுன்டர்' : ஐ.பி.எஸ்., அதிகாரி கைது| Dinamalar

குஜராத் போலி, "என்கவுன்டர்' : ஐ.பி.எஸ்., அதிகாரி கைது

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆமதாபாத் : குஜராத்தில் நடந்த, இஸ்ரத் ஜகான், போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி, ஜி.எல்.சிங்கால், சி.பி.ஐ., அதிகாரிகளால், நேற்று கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில், 2004ல், இஸ்ரத் ஜகான், 19, என்ற கல்லூரி மாணவியும், அவரது, நண்பர்கள் மூன்று பேரும், ஆமதாபாத் போலீசாரால், என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். "இவர்கள், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"இது, போலி என்கவுன்டர்' என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்திய, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட், "இஸ்ரத் ஜகான் உள்ளிட்ட, நான்கு பேரும், போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்' என, கூறி, இதில் தொடர்புடைய, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஜி.எல்.சிங்கால் உள்ளிட்ட, 22 போலீசார் மீது, வழக்கு பதிவு செய்யும்படி, உத்தரவிட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை