புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலத்திற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, வரும், 25ம் தேதி வரை நீட்டித்து, மத்திய தொலை தொடர்பு துறை அறிவித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், உரிமம் ரத்தான நிறுவனங்கள், சேவையை தொடரவும் அனுமதி மறுத்தது. இது தொடர்பாக, 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அடுத்த கட்ட ஏலத்தை,
விரைவாக முடிக்க வேண்டும் என, கூறியிருந்தது. இதையடுத்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலம் குறித்து, ஏலத்தில் பங்கேற்பவர்கள் சந்தேகங்களை கோரியிருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஆய்வு செய்த பின், புது ஏல நடைமுறை பற்றி விளக்குவதாக மத்திய தொலை தொடர்பு துறை கூறியிருந்தது. இது பற்றிய அறிவிப்பு, நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலத்திற்கு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக குறிப்பட்டு இருந்தது. இதற்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடைசி நாள், 22ம் தேதியாக இருந்தது இதற்கிடையில், "2ஜி' ஜி.எஸ்.எம்., ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான மூன்றாவது கட்ட ஏலம் விரைவில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறும் தேதி மற்றும் பிற விவரங்கள், தனியாக வெளியிடப்படும். உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, மொத்தம், 514.8 மெகாஹெர்ட்ஸ், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில், 271.25 மெகாஹெர்டஸ் மட்டுமே, கடந்த நவம்பரில் ஏலம் விடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.