கொஹிமா : நாகாலாந்தின் மொத்த வாக்காளர்களில், 49 சதவீதம் பேர், பெண்களாக இருந்தாலும், நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். நாகாலாந்தில், நெபியூ ரியோ தலைமையிலான, நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சிக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கிறது. இங்கு, காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள, 60 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்குள்ள, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 11 லட்சம். இதில், 49 சதவீத வாக்காளர்கள், பெண்கள். இந்த தேர்தலில், அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என, 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், ரகிலா; சுயேச்சையாக போட்டியிடும், யங்கெர்லா ஆகிய இருவர் மட்டுமே, பெண்கள்; மற்ற அனைவரும், ஆண்கள். கடந்த சட்டசபை தேர்தலில், நான்கு பெண்கள் போட்டியிட்டனர். ஆனால், அவர்களில் யாருமே, வெற்றி பெறவில்லை.
"இந்த தேர்தலில், இரு பெண் வேட்பாளர்களில், ஒருவராவது வெற்றி பெற்றால் தான், அடுத்த தேர்தலில், பெண்கள், அதிக அளவில் போட்டியிட முன் வருவர்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.