ஆமதாபாத் : மென்பொருள் தயாரிப்பு குறித்து அதிகம் படித்திராத, சாதாரண போலீஸ்காரர், குஜராத் போலீசுக்கு தேவையான மென்பொருளை தயாரித்து, அசத்தி வருகிறார். குஜராத் போலீசில், சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக, 1996ல் பணியில் சேர்ந்தவர், திலிப் சிங் தாக்குர். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர், மாநில போலீசுக்கு தேவையான, "பினாக்' என்ற மென்பொருளை உருவாக்கி, சாதனை படைத்துள்ளார். கம்ப்யூட்டர் மென்பொருள் வல்லுனர்களால் கூட, எளிதாக உருவாக்க முடியாத அந்த மென்பொருளை, தன் முழு திறமையையும் பயன்படுத்தி, திலிப் சிங் தாக்குர் உருவாக்கியுள்ளார். அதில், அவருடைய போலீஸ் அறிவுத் திறனையும் முழு அளவில் ஈடுபடுத்தியுள்ளதால், மென்பொருள் பயன்பாடு, முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இவர் திறமையை அறிந்த, அமெரிக்காவின், "மைக்ரோசாப்ட்' நிறுவன மென்பொருள்
வல்லுனர்கள், குஜராத் வந்து, திலிப் சிங்கை பாராட்டியுள்ளனர். அவர் குறித்து, ஆமதாபாத், குற்றப்பிரிவு துணை கமிஷனர், ஹிமன்ஷû சுக்லா கூறும் போது, ""திலிப் சிங்கின் திறமைகளை பார்த்து, நாங்களே வியப்படைந்தோம். அவரை காண வந்த, மைக்ரோசாப்ட் வல்லுனர்கள், தங்கள் நிறுவனத்தின் அதிநவீன சாப்ட்வேர் தயாரிப்பு உபகரணங்களை வழங்கி, அவரை ஊக்குவித்துள்ளனர்,'' என்றார். திலிப் சிங் உருவாக்கியுள்ள, "பினாக்' மென்பொருளை தான், மாநில போலீசார், பயன்படுத்தி வருகின்றனர். மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்களிலும், சாதாரண போலீஸ்காரரான திலிப் சிங்கும் பங்கேற்பது, ஆமதாபாத்தில் வாடிக்கையான ஒன்று.
எனினும், அவர் இன்னும் போலீஸ்காரராகவே உள்ளார்; பதவி உயர்வு பெரிய அளவில் வழங்கப்படவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.