மும்பை : சொத்து கணக்கை காட்டும்படி, முதல்வர் பிருதிவிராஜ் சவுகான் பிறப்பித்த உத்தரவை, மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களில் பாதி பேர், கண்டு கொண்டதாக தெரியவில்லை.
மகாராஷ்டிரா அரசில், அமைச்சராக இருக்கும் பாஸ்கர் ஜாதவ், தன் வாரிசுகளின் திருமணத்தை, மாநிலமே வியக்கும் அளவுக்கு, ஆடம்பரமாக நடத்தி சர்ச்சைக்கு உள்ளானார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரின் நடவடிக்கையால், கூட்டணியில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும், சிக்கல் எழுந்துள்ளது. பாஸ்கர் ஜாதவின் சொத்துக்கள் குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்த துவங்கியுள்ளனர். இதையடுத்து, மகாராஷ்டிரா அமைச்சர்கள் அனைவரும், தங்களின் சொத்து கணக்கை தாக்கல் செய்யும்படி, முதல்வர் பிருத்விராஜ் சவுகான் உத்தரவிட்டார்.
இதே போல், 2010ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும், சவுகான் உத்தரவிட்டு இருந்த போதும், அமைச்சரவையில் உள்ளவர்களில் பாதி பேரே, சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டபோது, தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் அனில் கால்கலி, மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு, பொது தகவல் அதிகாரி அளித்த பதிலில் கூறியதாவது: மகாராஷ்டிரா அமைச்சர்கள், தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, முதல்வர் சவுகான், 2010 டிசம்பரில் கூறியிருந்தார். பின், நான்கு மாதம் கழித்து, 2011ம் ஆண்டிலும், மறுபடியும் உத்தரவிட்டு இருந்தார்.
முதல்வரின் உத்தரவை ஏற்று, மொத்தமுள்ள, 40 அமைச்சர்களில், 22 அமைச்சர்கள்
மட்டுமே, சொத்து விபரத்தை தாக்கல் செய்து இருந்தனர். சொத்து கணக்கை தாக்கல் செய்யாதவர்களில், தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் அமைச்சர் பாஸ்கர் ஜாதவும் ஒருவர். சொத்து கணக்கு தாக்கல் செய்யாதவர்களில், தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே, உள்துறை
அமைச்சர் பாடீல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். முதல்வர் சவுகான், துணை முதல்வர் அஜித் பவாரும், சொத்துக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு, பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.