Central Government is exploring new ways to deal helicopter | ஹெலிகாப்டர் பேரம் புதிய வழிகளை ஆய்வு செய்கிறது மத்திய அரசு| Dinamalar

ஹெலிகாப்டர் பேரம் புதிய வழிகளை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

Added : பிப் 22, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஹெலிகாப்டர் பேரம் புதிய வழிகளை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

புதுடில்லி:""ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு குறித்த விசாரணையில், இத்தாலி கோர்ட் உதவவில்லை என்றாலும், அந்த நாட்டிடமிருந்து, தகவல்களை பெறுவதற்கான, அனைத்து வழிமுறைகளையும் ஆய்வு செய்வோம்,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய வெளியுறவு அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சல்மான் குர்ஷித் கூறியதாவது:ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தாக, எதிர்க்கட்சிகள், கூச்சல் போடுகின்றன. இந்த விஷயத்தில், அனைத்து நடைமுறைகளும், சட்டப்படியே நடந்துள்ளன. ஆனாலும் இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து, இத்தாலிய அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த வழக்கு தொடர்பான, முக்கிய கோப்புகளை தரும்படி, சி.பி.ஐ., தரப்பில் கோரப்பட்டது. இத்தாலி கோர்ட், "இந்த கோப்புகளை தர முடியாது' என, மறுத்து விட்டது.
ஆனாலும், இந்த வழக்கு தொடர்பான, விசாரணை கோப்புகளை, இத்தாலியிடமிருந்து பெறுவதற்காக, சட்டரீதியான, அனைத்து வழிமுறைகளையும், ஆய்வு செய்வோம். ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால் கூட, அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.விசாரணைக்கான கதவு, மூடப்பட்டுள்ளதாக கூறுவது, தவறு; எந்த கதவும், மூடப்படவில்லை. எந்த ஒரு நாட்டின் சட்டமாக இருந்தாலும், அதற்கு, கட்டுப்படுவோம்; மரியாதை அளிப்போம். அதே போல், நம் நாட்டு சட்டங்களையும், பிற நாடுகள், மதிக்க வேண்டும்.
ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக, நானும், ராணுவ அமைச்சர், அந்தோணியும், வெவ்வேறு கருத்துக்களை கூறுவதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக, விசாரணை நடத்தி, அதில், முறைகேடு நடந்திருப்பதாக உறுதி செய்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.விசாரணையே நடத்தாமல், ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கூடாது என்பதே, என் கருத்து. அந்தோணியும், இதைத் தான், கூறுகிறார். எங்களுக்குள், எந்த வேறுபாடும் இல்லை.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
22-பிப்-201309:51:58 IST Report Abuse
P. Kannan ஒன் மோர் ஆப்பு நீங்களா வச்சு கிட்டது நிதானமா எடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வண்டி ரெடி ஆயிடுச்சு போய் சேர்ந்த பின் மறாக்காம கடிதாசி போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
குண்டலகேசி - chennai,இந்தியா
22-பிப்-201307:26:19 IST Report Abuse
குண்டலகேசி அதான. ஊழலை பத்திரமாக பாதுகாப்பதில் உங்களுக்குள் கருத்து வேற்றுமையே வராதே. இப்ப பேனாவுல என்ன ஊத்தி எழுதுறாருன்னு தெரில. எனக்கு இவர பாத்தா "பொண்ணு வீட்டுக்காரன்" படத்துல வர்ற கௌண்டமணியோட அப்பா கேரக்ட்டர்தான் ஞாபகம் வருது.
Rate this:
Share this comment
Cancel
Thyagavel - Chennai,இந்தியா
22-பிப்-201307:11:32 IST Report Abuse
Thyagavel ஒவ்வொரு கருத்தும் 10 லட்சம் நபர்கள் நினைபதர்க்கு சமம், காங்கிரஸ் க்கு பாடம் புகட்டுங்கள் 2014இல். அரசியல ஒருத்தரு தேர்தல தோல்வி அடைந்துவிட்டால் அவுங்க கட்சியோட அடிப்படை உறுபினர்கள் கூட மதிக்க மாட்டாங்க, சல்மான், சிதம்பரம், etc முதல்ல அரசியல்ல இருந்து வெளி ஏற்றவேண்டும் மற்றவை அடுத்து தடுத்து நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
22-பிப்-201307:03:51 IST Report Abuse
ஆரூர் ரங இதனை நாள் திமுக வோடு கூட்டணியிலிருந்தும் காங்கிரஸ் ஒன்றைக் கற்றுக் கொள்ளவில்லை. திமுக தலைவர்கள் முன்ஜாக்கிரதையாக கணக்கு வழக்குகளை சரி செய்து வைத்துக்கொண்டுதான் லஞ்சம் வாங்கி உடனே வெள்ளையாக்கிவிடுவர். தேவையில்லாம எப்பெப்படியோ வாங்கிட்டு பின்னாடி சி பி ஐவழியாக மிரட்டித் தப்பிக்கிறது அசிங்கம் . ஊழல் வெட்ட வெளிச்சமாகிறது ஊழல் என்பது இப்போ வெள்ளைப் பணமாகவே கை மாறத்துவங்கிவிட்டது இப்பொது ஷேர் மார்க்கெட்டில் அன்னிய முதலீடு என்பது மொரீஷியஸ், மாலி மூலம் வரும் Participatory Notes எனும் இந்திய கள்ளப் பணமே அதனை தடை செய்ய ப சிதம்பரம் ஒப்புக்கொள்வதேயில்லை. தன கண்ணைத் தானே குத்திக் கொள்வாரா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-பிப்-201306:14:11 IST Report Abuse
villupuram jeevithan ஆமா, எந்த ஊழலில் சட்டத்துக்கு எதிராக நடந்துவிட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது இந்த விஷயத்தில், அனைத்து நடைமுறைகளும், சட்டப்படியே நடந்துள்ளன என சான்றளிக்கிறீரே?
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
22-பிப்-201305:46:54 IST Report Abuse
Panchu Mani ராஜீவ் காந்திக்கு மட்டும் ஹோட்டல் ல சாப்பிடிற பழக்கம் இல்லாம இருந்திருந்தா சல்மான் குர்ஷித்க்கு இவ்ளோ பெரிய வேலை பளு ஏற்பட்டிருக்காது
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
22-பிப்-201304:06:52 IST Report Abuse
Baskaran Kasimani முக்கியமான கோப்புக்களின் நகல்களை கேட்கவேண்டும். இத்தாலிய நீதிமன்றம் ஒன்றும் நம்ம ஊரு CBI அல்ல - எல்லா கோப்புக்களையும் வாங்கி அழித்து விட. நீதிமன்றத்திடம் ஒன்றுமே கேட்கவேண்டியதில்லை. இத்தாலிய நிறுவனத்தின் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட கோப்புக்களின் நகல்களை வாங்கினால் போதும். இவ்வளவு பெரிய தொகையை வங்கி மூலமே பரிவர்த்தனை செய்திருக்க முடியும். பணம் வாங்கியவர்களை இந்தியாவில் வைத்து விசாரித்தால் உண்மை வந்துவிடப்போகிறது. இத்தாலிய நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மட்டும் ரத்து செய்தால் போதாது - நஷ்ட ஈடும் கூட கோர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
22-பிப்-201302:59:25 IST Report Abuse
தமிழ் சிங்கம் சோனியா காந்தியை தத்து கொடுத்த இத்தாலி நாட்டிற்கு எந்த துன்பமும் வராதபடி இந்தியா பார்த்து கொள்ளும். அந்த நாட்டின் சட்ட திட்டங்களை இந்தியா மதிக்கும். ஒப்பந்தம் ரத்து செய்யபடகூடாது என்று மூத்த அமைச்சர் சல்மான் சொல்வதில் இருந்தே இந்தியர்களுக்கு புரிகிறது. ஒப்பந்தம் ரத்து செய்யப்படமாட்டாது என்று. இந்தியர்களும் அதை விரும்பவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
22-பிப்-201301:10:18 IST Report Abuse
Thangairaja போகாத ஊருக்கு ஏம்பா வழி தேடறீங்க........வீண் செலவை விட்டு புது ஒப்பந்தம் போடா முயற்சி பண்ணுங்க.....அதாவது உருப்படுதான்னு பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
K.Rajasekaran - chennai,இந்தியா
22-பிப்-201301:08:51 IST Report Abuse
K.Rajasekaran அப்போ நம்ம சொக்கதங்கத்துக்கு அவுங்க ஊர்ல செல்வாக்கு இல்லையா? நாம தான் பைத்தியமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை