ஷில்லாங்: மேகாலயாவில், வரும், 23ம் தேதி நடக்கவுள்ள, சட்டசபை தேர்தலில், ஹிட்லர், மாபியா, கென்னடி போன்ற, வித்தியாசமான பெயர்களுடைய, வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தேர்தல் களத்தில், சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேகலயாவில், முகுல் சங்மா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும், 346 வேட்பாளர்கள், போட்டியிடுகின்றனர். இதில், சில வேட்பாளர்களின் பெயர்கள், மிக வினோதமாக உள்ளன. ஹிட்லர், கென்னடி, அலெக்சாண்டர் ஆகிய தலைவர்களின், பெயர்களை உடைய வேட்பாளர்கள், இதில் போட்டியிடுகின்றனர். பாம்பர், மாபியா என, அச்சுறுத்தும் பெயர்களை உடைய, வேட்பாளர்களுக்கும், பஞ்சமில்லை. ஹிலாரியஸ், ஹேம்லெட், போல்டுனெஸ், நெஸ்டிங் என்ற, வினோதமான பெயர்களை உடைய வேட்பாளர்களும், கணிசமாக போட்டியிடுகின்றனர்.
இதனால், இந்த வித்தியாசமான பெயர்களை உடைய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோர், தேர்தல் பிரசாரத்தில், அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, கிண்டலடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த கிண்டலுக்கு, அடுத்த நாளே, சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், சூடான பதிலடி கொடுக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால், சமீப காலமாக மந்தமாக இருந்த, மேகாலயா தேர்தல் பிரசாரத்தில், தற்போது விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவைச் சேர்ந்த, பிரபல கல்வியாளர், டாக்டர் அமந்தா பாஸ் கூறியதாவது: பொதுவாகவே, வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு, மேற்கத்திய கலாசாரத்தின் மீது, காதல் உண்டு. இதனால், இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையில், மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு, அதிகம் இருக்கும். இங்குள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, மேற்கத்திய பெயர்களை வைக்கின்றனர். இதை, கிண்டலடிப்பது, மிகவும் தவறான செயல். இவ்வாறு டாக்டர் அமந்தா பாஸ் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.