புதுச்சேரி: தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படவில்லை. மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் நேற்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதையொட்டி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. வங்கிகள், இரண்டாம் நாளாக நேற்றும் செயல்படவில்லை. நகரப் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சினிமா தியேட்டர்களும் மூடிப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கின. இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே, கல்வீச்சில் ஒரு தனியார் பஸ் கண்ணாடி உடைந்தது.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால், கடையடைப்பு தவிர, இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏதுமில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.