சங்கரராமன் வழக்கு விசாரணை மார்ச் 7 தேதிக்கு ஒத்தி வைப்பு| Dinamalar

சங்கரராமன் வழக்கு விசாரணை மார்ச் 7 தேதிக்கு ஒத்தி வைப்பு

Updated : பிப் 22, 2013 | Added : பிப் 22, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி : சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, மார்ச், 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு பெற்றதை ஒட்டி, அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், கடந்த மாதம், 18 மற்றும் 24ம் தேதிகளில், பதில் வாதம் நடத்தினார். இம்மாதம், 13ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போதும், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி, பதில் வாதத்தை நிறைவு செய்தார். இந்த வழக்கில் அப்ரூவராக இருந்த ரவி சுப்ரமணியம், பல்டி அடித்ததால், வழக்கில் அவரைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, அரசு சிறப்பு வழக்கறிஞர், தேவதாஸ் தாக்கல் செய்துள்ள மனு மட்டும், நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த, முதன்மை அமர்வு நீதிபதி முருகன், விடுமுறையில் சென்று விட்டதால், மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பேரில், 11 பேர் மட்டும் ஆஜராகியினர்; ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 13 பேர் ஆஜராகவில்லை. நீதிபதி தண்டபாணி, வழக்கு விசாரணையை, வரும், 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshminarayanan Ha - chennai,இந்தியா
22-பிப்-201307:44:11 IST Report Abuse
Lakshminarayanan Ha It is not stated when this case is started in indian court, how long so far, what will happ after this judgement, they can go for appeal to the district court then another 45 years, after that they will go to the high court then i am not sure who will follow this case so the last generation already lost all their property for giving as fees. Then please do not thing will will continue to supreme court for appeal, that's why indian priminister said all lawyers and judges please save my country to go for peace by closing all cases as soon as possible. Lawyers and judges should say jai hind every day.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை