பாதி சொத்தை நன்கொடையாக வழங்க பிரிட்டன் தொழிலதிபர் பிரான்சன் உறுதி| Dinamalar

பாதி சொத்தை நன்கொடையாக வழங்க பிரிட்டன் தொழிலதிபர் பிரான்சன் உறுதி

Added : பிப் 22, 2013 | கருத்துகள் (2)
Advertisement
பாதி சொத்தை நன்கொடையாக வழங்க  பிரிட்டன் தொழிலதிபர் பிரான்சன் உறுதி

லண்டன் : வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காக, தனது சொத்தில் பாதியை, நன்கொடையாக வழங்குவதாக, பிரிட்டன் செல்வந்தர், ரிச்சர்டு பிரான்சன் அறிவித்துள்ளார். உலகின் பெரும் செல்வந்தர்கள், ஏழை மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினர் பயன் பெறும் வகையில், தங்கள் சொத்தில் ஒரு பகுதியை, "கிவிங் ப்ளெட்ஜ்' என்ற அறக்கட்டளையின் கீழ், நன்கொடையாக வழங்கி வருகின்றனர். கடந்த, 2009ல், "மைக்ரோசாப்ட்' நிறுவனர்களில் ஒருவரான, பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான, வாரன் பபெட் ஆகியோரால், "கிவிங் ப்ளெட்ஜ்' அமைப்பு துவங்கப்பட்டது. உலக செல்வந்தர்கள் பலர், இந்த அமைப்புக்கு பெரும் தொகையை, நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டனின், நான்காவது பெரும் பணக்காரர் என அறியப்படும், விமான நிறுவன அதிபர், ரிச்சர்டு பிரான்சன், தனது சொத்தில் பாதியை, "கிவிங் ப்ளெட்ஜ்' அமைப்புக்கு நன்கொடையாக வழங்குவதாக, அந்த அமைப்புக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, அவர் கூறியதாவது: நானும், என் மனைவி ஜோனும், முதலில் ஒரு படகு வீட்டில் வாழ்ந்தோம். ஒரு நாள் அது, நீரில் மூழ்கிவிட்டது. அப்போது, பல பொருட்களை நாங்கள் இழந்தாலும், பெரிய இழப்பாக கருதியது, எங்கள் புகைப்பட ஆல்பத்தை தான்.
பின், பிரிட்டனில் நாங்கள் வசித்த மாளிகையில், தீ விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கடந்த வருடம் எங்களுக்கு சொந்தமான, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு மின்னல் தாக்கி சேதமடைந்தது. இந்த விபத்துகளில், பொருட்கள் சேதமடைந்தாலும், நாங்கள் உயிர்பிழைத்தோம்.
எனவே, சொத்துகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என நினைத்த நாங்கள், "கிவிங் ப்ளெட்ஜ்' மூலமாக, எதிர்கால தலைமுறையினருக்கு உதவும் வகையில், எங்கள் சொத்தில் பாதியை, நன்கொடையாக வழங்க முடிவெடுத்தோம். எங்கள் குழந்தைகளும், நாங்கள் எடுத்த முடிவை, வரவேற்றுள்ளனர். இவ்வாறு, ரிச்சர்டு பிரான்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
23-பிப்-201300:32:48 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இந்த பணத்தை தீவிரவாத குழுக்களுக்கு எதிராய் கொடுத்திருப்பது தானே.
Rate this:
Share this comment
Cancel
oviya.vijay - Madurai,இந்தியா
22-பிப்-201308:35:59 IST Report Abuse
oviya.vijay மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்... வாழைபோல தன்னை தந்து தியாகி ஆகலாம்... உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்... ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் கிளைகள் ஆகலாம்... உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்... யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்... மனம்... மனம்... அது கோவிலாகலாம்.... oviya.vijay
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை