வாஷிங்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த, தெற்கு கரோலினா மாகாண கவர்னர், நிக்கி ஹாலேயின் புகழ், முந்தைய ஆண்டுகளை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. மற்றொரு இந்திய கவர்னர், பாபி ஜிண்டால் புகழ் மங்கியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின், 116வது கவர்னராக இருப்பவர், நிக்கி ஹாலே. இவரின் முழுப்பெயர், நிம்ரதா கவுர் (நிக்கி) ரந்தவா ஹாலே, 42. குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2011, ஜனவரி மாதம் முதல் அப்பொறுப்பில் உள்ளார்.
பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட நிக்கியின் பெற்றோர், டாக்டர் அஜித் சிங் ரந்தவா மற்றும் ராஜ் கவுர் ரந்த்வா, நீண்ட காலத்திற்கு முன்பே, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்திருந்தனர். கரோலினாவின், முதல், பெண் கவர்னராக பொறுப்பேற்ற நிக்கி, இந்தியாவை சேர்ந்த, இரண்டாவது கவர்னர் என்ற பெருமையை பெற்றார். லூசியானா கவர்னராக உள்ள, பாபி ஜிண்டாலும் இந்தியாவின், பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தற்போதைய கவர்னர்களில் மிகவும் இளம் வயது கவர்னர், நிக்கி தான். கவர்னராக நிக்கி பொறுப்பேற்ற போது, அவர் புகழ், 34.6 சதவீதமாக இருந்தது. இப்போது, 9 புள்ளிகள் உயர்ந்து, 43.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், பாபி ஜிண்டாலின் புகழ், சற்றே குறைந்துள்ளது. 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஜிண்டாலின் செயல்பாடுகளை, 58 சதவீதம் பேர் ஆதரித்து, 34 சதவீதம் பேர் எதிர்த்தும் இருந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி, அவரின் செயல்பாடுகளை, 37 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்; 57 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.