இந்தோனேஷியாவில் 7 பேர் சுட்டுக்கொலை| Dinamalar

இந்தோனேஷியாவில் 7 பேர் சுட்டுக்கொலை

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜயபுரா : இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா என்ற பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய, இருவேறு தாக்குதல்களில், ஐந்து ராணுவ வீரர்கள் உள்ளிட்ட, ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள, பதட்டம் நிறைந்த, பப்புவா மாகாணத்தின், டிங்கி நம்புத் கிராமத்தில், அடையாளம் தெரியாத நபர்கள், ராணுவ வாகனம் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மூன்று ராணுவ அதிகாரிகளும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். மேலும், அப்பாவி பொதுமக்கள், இருவர் பலியாயினர்.
இதே பகுதியில் உள்ள மற்றொரு ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட, மற்றொரு தாக்குதலில், வீரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலுக்கு, "சுதந்திர பப்புவா இயக்கம்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், காரணமாக இருக்கலாம் என, இந்தோனேஷிய ராணுவ உயரதிகாரி இஸ்கந்தர் சிதாம்புல், தெரிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டின் காலனியாக இருந்த, பப்புவா பகுதி, 1969ல் இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு, இந்தோனேஷியாவிடம் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், "சுதந்திர பப்புவா இயக்கம்' போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை