விமான விபத்து : ஐந்து பேர் பலி| Dinamalar

விமான விபத்து : ஐந்து பேர் பலி

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாம்சன் : அமெரிக்காவில், ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில், ஐந்து பேர் பலியாயினர்; இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின், தாம்சன் மெக்டபி விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, "ஜெட்' விமானம் ஒன்று தரையிறங்க முயன்றது. அப்போது, திடீரென, விபத்துக்கு உள்ளாகி, நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
""விமானத்தில் ஏழு பேர் பயணித்தனர்; விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை,'' என, விமான நிர்வாக துறை செய்தி தொடர்பாளர், கேத்தலின் பெர்ஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை