பாரீஸ் : கேமரூன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, பிரான்ஸ் நாட்டு குடும்பத்தினர், போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்கா கண்டத்தின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ளது, கேமரூன் குடியரசு. அங்குள்ள சுற்றுலா தளத்திற்கு, கடந்த வாரம் சென்றிருந்த, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ஒரே குடும்பத்தினர், ஏழு பேரை, உள்ளூர் முஸ்லிம் தீவிரவாத இயக்கமான, "போகோ ஹரம்' தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதற்கு, பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்டே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கேமரூனுக்குள் நுழைந்து, பிரான்ஸ் நாட்டினர், அதிரடியாக மீட்கப்படுவர் என, கோபத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேமரூன் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், கடத்தப்பட்ட, ஏழு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அண்டை நாடான நைஜீரியாவில், அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு சென்ற கேமரூன் வீரர்கள், பிரான்ஸ் நாட்டினரை அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.