லாகூர் : பாகிஸ்தானில், பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 23 மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். லாகூரின், ஷாத்ரா என்ற பகுதியில், "தாரா அர்கம்' என்ற பெயரில் பள்ளி செயல்படுகிறது. நேற்று அந்த பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும், தக்க நேரத்தில் தீயணைக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். ""சமையல் காஸ் கசிந்திருப்பதை அறியாமல், ஆசிரியை, ஹீட்டரை பற்ற வைத்ததால், விபத்து ஏற்பட்டது. இதில் ஆசிரியையும், 23 மாணவர்களும் காயமடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என, மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக, பள்ளி நிர்வாக அதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார். தலைறைவாக உள்ள பள்ளி முதல்வரை, போலீசார் தேடி வருகின்றனர்; பள்ளியை மூட, கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.