Advertisement
8.2 சதவீத அமெரிக்க இந்தியர்கள் ரூ.12 லட்சம் கூட சம்பாதிப்பதில்லை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013,00:23 IST

வாஷிங்டன் : அமெரிக்க மக்கள் தொகையில், 8 சதவீதமாக இருக்கும், 30 லட்சம் இந்தியர்களில், 8.2 சதவீதம் பேர், ஆண்டுக்கு, 12 லட்ச ரூபாய் கூட சம்பாதிக்க முடியாதவர்களாக உள்ளனர். கடந்த, 2007 - 2011ம் ஆண்டிற்கான, அமெரிக்க சமுதாய ஆய்வறிக்கையை, மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வசிக்கும் பல இனங்களை, நாடுகளை சேர்ந்தவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்நாட்டை பொறுத்த வரை, ஆண்டுக்கு, 12 லட்ச ரூபாய் வருமானம் இல்லாதவர்கள், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கருதப்படுவர். அந்த வகையில், அமெரிக்காவில் வாழும், 30 லட்சம் இந்தியர்களில், 8.2 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில், 8 சதவீதமாக இருக்கும் இந்தியர்களை போலவே, அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்களில், 8.2 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.
வியட்னாம் மக்கள், 14.7 சதவீதம், கொரியர்கள், 15 சதவீதம், பிலிப்பைன்ஸ் மக்கள், 5.8 சதவீதம் பேர் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளனர்.
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்றில்லாமல், பொதுவாக வறுமையால் பாதித்த, இரண்டு இனங்கள் என்ற வகையில், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அலாஸ்காவை பூர்வீகமாக கொண்டவர்களும், 27 சதவீதம் பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்களில், 25.8 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் உள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Aravind Kumar - Chennai,இந்தியா
22-பிப்-201308:43:37 IST Report Abuse
Aravind Kumar நம்ம நாட்ல ஒரு நாளைக்கு 20 ருபாய்க்கு கிழ் இருந்தால் அவன் வறுமை கோட்டிற்கு உள் இருக்கிறான் என்று அர்த்தம். அதாவது 34 ருபாய் இருந்தால் ஒரு குடும்பத்தை நடத்தலாம் என்று மத்திய அமைச்சர் சொல்றார். அவர் நடத்தி காட்டுவாரா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
srinivasansulochana - newsouthwales,ஆஸ்திரேலியா
22-பிப்-201305:58:30 IST Report Abuse
srinivasansulochana எங்கேயோ லஞ்சம் இல்லாத இடத்தில் லக்ஷணமாக் வாழ்ந்தால் சரி.வாழ்க்கை த்த்ரம் நிச்சயமாக நன்றாக இருக்கும், மின்சாரம் இல்லாமல், தண்ணிர் இல்லாமல், குழந்தைகள் படிப்பு தடைபடாமல், இந்த விதங்க்களிலாவது நன்றாக இருக்கலாம்.
Rate this:
1 members
0 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.