இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு, அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும், போன் மற்றும் இ-மெயில்களை கண்காணிக்க ஏதுவான, "நேர்மையான விசாரணை மசோதா, 2013'ல், அதிபர், ஜர்தாரி நேற்று கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் மூலம், உளவு அமைப்புகளின் அதிகார வரம்பு அதிகரித்துள்ளது. "நேர்மையான விசாரணை மசோதா, 2013' பாகிஸ்தான் பார்லிமென்டின் கீழ்சபையான, தேசிய அசெம்ப்ளியில், டிசம்பர், 20ல் நிறைவேற்றப்பட்டது; மேலவையான, செனட்டில், இம்மாதம், 1ம் தேதி நிறைவேறியது. எனினும், இரண்டு சபைகளிலும் பலத்த எதிர்ப்பை, இம்மசோதா சந்தித்தது. தனி நபர் சுதந்திரம் பறிபோய்விடும் என, எதிர்க்கட்சியான, பி.எம்.எல்., - என் மற்றும் முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய, பிரதமர், ரஜா பர்வேஸ் அஷ்ரப் மற்றும் சட்ட அமைச்சர், பரூக் நயிக் ஆகியோர், "அப்பாவி மக்களுக்கு எதிராக, ஒருபோதும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது; தீவிரவாதிகளையும், தீவிரவாத செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையே இது' என உறுதி அளித்தனர். இந்த மசோதாவில், அதிபர், ஜர்தாரி நேற்று கையெழுத்திட்டதை அடுத்து, சட்டமானது. இனிமேல், சந்தேகத்திற்கு இடமான போன் அழைப்புகள், இ-மெயில் தொடர்புகள் போன்றவற்றை, பாக்., உளவு அமைப்பினர், எந்த நேரத்திலும் ஒட்டு கேட்கவோ, உளவு நடவடிக்கை மேற்கொள்ளவோ முடியும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.