பீஜிங் : "திபெத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும்; தலாய் லாமாவை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, இரண்டு திபெத்திய இளைஞர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு, தன்னாட்சி வழங்க வேண்டும் என, திபெத் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். திபெத்தியர்களின் தலைவர், தலாய் லாமாவுக்கு அந்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தங்கியிருந்து, திபெத்திய உரிமைகளுக்காக போராடி வருகிறார். சீனாவின், சிசுவான் மாகாணத்தின், அபா என்ற பகுதியில், திபெத்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். புத்த மத இளம் துறவிகள், திபெத்திய மக்கள் என, ஏராளமானோர், தங்கள் கோரிக்கைகளுக்காக, தங்களை தாங்களே தீ வைத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், 17 வயது ரின்சென், 18 வயது சோனம் தார்கியே ஆகிய இருவர், நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். திபெத்தியர்கள் அதிகம் வாழும் அபா பகுதிக்குள், பிற நாட்டினர் மற்றும் சீனாவின் பிற மாகாணத்து மக்கள் செல்ல எளிதாக அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதால், அங்கு நடக்கும் கொலைகள், தற்கொலைகள் குறித்த தெளிவான தகவல்கள் வெளியே தெரிவதில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.