The angry husband shot his wife | பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி | Dinamalar
Advertisement
பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

இந்தூர்:சமையல் செய்ய காஸ் சிலிண்டர் ஏற்பாடு செய்யாததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனை சுட்டுக் கொன்றார்.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் ஆசிப் கான்; லாரி ஒட்டுனர். இவரது மனைவி நாஜியா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக, அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, இவர்களின் வீட்டில், சமையல் காஸ் தீர்ந்து விட்டது. வேறு சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யும்படி, நாஜியா பல முறை கேட்டும், ஆசிப்கான் அதை காதில் வாங்கவில்லை. இதனால், கடும் கோபத்தில் இருந்த நாஜியா, நேற்று காலை, தன் கணவன், ஆசிப்கானை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, நாஜியாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:ஆசிப்கான், ஏற்கனவே திருமணமானவர். இரண்டாம் தாரமாக, நாஜியாவை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில நாட்களாக சரியில்லை. நேற்று முன்தினம் இரவு, காஸ் தீர்ந்து, சமையல் செய்ய முடியாமல், பசியுடன் படுக்க நேரிட்டதால், கடும் கோபம் அடைந்துள்ள நாஜியா, நேற்று காலை, கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார். அந்த துப்பாக்கியே, அவருக்கு வினையாகி விட்டது. லாரி ஓட்டுனரான ஆசிப் கானுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - trichy,இந்தியா
22-பிப்-201315:00:30 IST Report Abuse
selva பசிக்காக இப்படியா?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
22-பிப்-201314:34:06 IST Report Abuse
JAY JAY படி தாண்டுவாள் பத்தினி என்று கேள்வி பட்டுள்ளோம்...பசி தாங்க மாட்டாள் பத்தினி என்று இப்போ தான் கேள்வி படுகிறோம்...
Rate this:
2 members
3 members
26 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
22-பிப்-201314:33:08 IST Report Abuse
JAY JAY கேஸ் சிலிண்டர் காலியானாதால் தான் இந்த கொலை என்பதை படித்தும், இதற்கெல்லாம் காரணம் மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று யாரும் இங்கு கருத்து பதிவு செய்யாமல் இருப்பது, ஆச்சர்யமான விஷயம்....
Rate this:
4 members
2 members
36 members
Share this comment
Cancel
Vinoth - Chennai,இந்தியா
22-பிப்-201314:07:02 IST Report Abuse
Vinoth எனது வீட்டில் நேற்று காஸ் தீர்ந்துவிட்டது... இந்த செய்தியை படித்த உடன் தான் ஞாபகம் வந்தது. அலறி அடித்து புக் செய்துவிட்டேன்.
Rate this:
1 members
0 members
49 members
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
22-பிப்-201313:35:50 IST Report Abuse
Sesha Narayanan அது சரி இவர்களுக்கெல்லாம் சுட்டு கொள்வதற்கு துப்பாக்கி எப்படி கிடைக்கிறது???
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-பிப்-201313:15:32 IST Report Abuse
Pugazh V லாரி டிரைவர் பெயரைக் கவனியுங்கள். இவருக்கு ஏது துப்பாக்கி? எங்கிருந்து கிடைத்தது? சினிமா எடுத்தால் மட்டும் கோபம் வருகிறது. அவனை சுட்டுக் கொன்றதே நல்லது, அல்லது அந்த துப்பாக்கி கொடுத்தவனுக்காக இந்த கான் எங்காவது குண்டு வைத்து பலரைக் கொன்றிருப்பான்.
Rate this:
7 members
0 members
44 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
22-பிப்-201313:11:54 IST Report Abuse
LAX இந்த செய்தியை வெறும் வேடிக்கையாக நினைக்காமல், உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள்.. அவன் எங்காவது சாப்பிட்டு வந்திருப்பான். வீட்டில் காஸ் மற்றும் உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள் இல்லை என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையே இல்லை. அவளுக்கும் வெளியே சென்று சாப்பிட்டுவர வழியிருந்திருந்தால், எக்கேடு கெட்டோ போகட்டும் என்று நினைத்து வெளியில் சென்று சாப்பிட்டிருப்பாள். அவன் இவளைப் பழிவாங்குவதாக நினைத்து பட்டினி போட்டுள்ளான். இன்று படித்த ஆண்கள் பலரும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு வீடுகளில் ஸடிஸ்ட் -களாக செயல்பட்டுவருகின்றனர். பசி பொறுக்க முடியாத நேரத்தில் எவ்வளவு ஆத்திரம் வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
Rate this:
6 members
0 members
23 members
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
22-பிப்-201313:10:10 IST Report Abuse
சத்தி கட்டாயத்தின் பேரில் நடைபெறும் திருமணம். பெற்றோருக்கு கடமை முடிந்தால் சரி, பிள்ளைகளின் வாழ்க்கை சீரழியுதே. இப்போவெல்லாம் பெண்பிள்ளைகளின் சம்பாத்தியத்தை நம்பியே பல அப்பாக்கள் இருகிறார்கள். பிள்ளைகள் குறிப்பா பெண்கள் தெரிந்து செயல்படுங்கோ, பின்னாடி துப்பாக்கி எல்லாம் தேவை படாது.
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
22-பிப்-201312:43:57 IST Report Abuse
Ravichandran ஒரு சாதாரண லாரி டிரைவர் ஆசிப் கான் வீட்டில் துபாக்கி, யோசியுங்கள் மக்களே. ஒரு தடவை, ஷிண்டே இந்த நியூஸ் படிச்சாரனு கிராஸ் செக் பண்ணுங்கப்பா.
Rate this:
3 members
0 members
21 members
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
22-பிப்-201312:27:22 IST Report Abuse
Rajasekaran Palaniswamy எங்களுக்கு சப்பாத்தி மட்டுமல்ல துப்பாக்கியும் சுட தெரியும்.
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்