மதுரை: "நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சிவகாசி, சாட்சியாபுரம் நித்யா தாக்கல் செய்த மனு: கோவை கற்பகம் பல்கலையில், பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிக்கிறேன். சிவகாசி, பாங்க் ஆப் இந்தியா கிளையில், 4 லட்சம் ரூபாய் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தேன். "நிர்வாக ஒதுக்கீட்டில், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு, இந்திய வங்கிகள் சங்க வழிகாட்டுதல்படி, கல்விக்கடன் வழங்க முடியாது' என, வங்கி நிர்வாகம் மறுத்தது. கல்விக்கடன் வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தேன். மனுவை, வங்கி பரிசீலிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் தாமத படுத்துகிறது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் மாரிமுத்து ஆஜரானார். வங்கி தரப்பில், "நிர்வாக ஒதுக்கீட்டில் கல்விக்கடன் வழங்க முடியாது. மனுதாரர், வேறு திட்டத்தில் கடன் பெற, கூடுதல் சொத்துப் பிணையம் தாக்கல் செய்யவில்லை' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி உத்தரவு: மத்திய நிதி அமைச்சர் தலைமையில் 2012 ஆக., 18 ல் நடந்த கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், கல்விக்கடன் வழங்குவது பற்றிய, புது திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை தொடரும் மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும், கல்விக்கடன் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி, நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. மனுதாரர், கல்விக்கடன் பெற தகுதி பெற்றுள்ளார். வங்கி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.