பாம்பன் ரோடு பாலத்தில் "நகரும் இரும்பு சாரம்' சோதனை ஓட்டம் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் ரோடு பாலத்தில் "நகரும் இரும்பு சாரம்' சோதனை ஓட்டம் வெற்றி

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தில் பொருத்தப்பட்ட, நகரும் இரும்பு சாரம்(மூவிங் கேன்ட்ரி) சோதனை ஓட்டம், வெற்றிகரமாக முடிந்தது.பாம்பன் ரோடு பாலம் 1988ல் பயன்பாட்டிற்கு வந்த பின் 5 ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்புக்கப்பட்டது. ஆனால், 2001ம் ஆண்டுக்கு பராமரிப்பு பணி நடக்கவில்லை. 18 கோடியே 58 லட்ச ரூபாயில் பாலத்தில் பராமரிப்பு பணி ஜன.,28ம் தேதி துவங்கியது. பாலத்தின் கீழ்பகுதியில், பழைய பெயிண்ட் அகற்றி, விரிசலை சரிசெய்ய, 2 டன் எடையுள்ள, நகரும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம், பிப்.,8ல் தேதி துவங்கி, நேற்று பாலத்தின் பாம்பனிலிருந்து அடுத்த முனை வரை கொண்டு செல்லப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், மூன்று தினங்களில், "கம்ப்ரசர்' இயந்திரம் மூலம் பழைய பெயிண்ட் அகற்றி, சிமென்ட் கலவையால் விரிசலை சரிசெய்யும் பணி துவங்க உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை