கோவையில் பெண் கொடூர கொலை: துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த பயங்கரம்| Dinamalar

கோவையில் பெண் கொடூர கொலை: துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த பயங்கரம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கோவையில் பெண் கொடூர கொலை: துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த பயங்கரம்

கோவை: கோவையில், பெண் படுகொலை செய்யப்பட்டு, சடலத்தை துண்டு துண்டாக்கி, சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த கொடூரமான சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, அவிநாசி ரோடு, "ரஹேஜா' தனியார் குடியிருப்பில், ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் நடராஜ், 63; தனது மனைவி சரோஜினி, 54 மற்றும் இரண்டாவது மகன் தனசேகரனுடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்கு (எண்:005) எதிரே, யாசர் அராபத், 23, என்பவர் உள்வாடகைக்கு (எண்:002) குடியிருந்து வருகிறார். தனசேகரன், திருப்பூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸில் வேலைக்கு பார்த்து வருகிறார். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு, ஒரு குழந்தை உள்ளது. கடந்த 13ம் தேதியிலிருந்து சரோஜினியை காணவில்லை. இதுகுறித்து, 16ம் தேதி ரேஸ்கோர்ஸ் போலீசில், தனசேகரன் புகார் செய்தார். போலீசார் சரோஜினியை தேடி வந்தனர். நேற்று மதியம், யாசர் அராபத் தங்கியிருந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. வசிப்போர், போலீசாருக்கு தகவல் தந்தனர். அங்கு விரைந்த போலீசார், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். உள்ளேயிருந்த இரண்டு சூட்கேஸ்களிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரிந்தது. சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது, ஆறு துண்டுகளாக வெட்டிய நிலையில், பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சரோஜினியின் மகன் தனசேகரை அழைத்து, சடலத்தை போலீசார் காட்டினர். தனது தாயார் சரோஜினியின் சடலம் தான் என, அவர் உறுதி செய்தார். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பெண்ணை கொலை செய்து, சடலத்தை துண்டு துண்டாக பெட்டிக்குள் வைத்த சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாசர் அராபத் எங்கே? போலீஸ் துணை கமிஷனர்கள் பிரவேஷ் குமார், சுகுமாறன் ஆகியோர், சம்பவம் நடந்த பகுதியில் குடியிருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். யாசர் அராபத் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும், கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது; சூட்கேஸ் இருந்த இடத்திலிருந்து வீட்டின் பின்புறம் வரை ஓடிச் சென்று, நின்றது. துணை கமிஷ்னர் பிரவேஸ் குமார் கூறுகையில், ""கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம். சூட்கேஸ் இருந்த வீட்டில் வசிக்கும் யாசர் அராபத்தை, இன்று (நேற்று) காலையில் கூட பார்த்ததாக தெரிவித்தனர். மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாடகைக்கு இருந்ததாக தெரிகிறது. இது பற்றி விசாரிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

சிமென்ட் பூச்சு...! சரோஜினி காணாமல் போன நாளிலிருந்து, எதிர் வீட்டில் தங்கியிருந்த யாசர் அராபத், தனசேகரனிடம் தினமும் விசாரித்து வந்துள்ளார். "அம்மா கிடைத்து விட்டார்களா?' என, அக்கறையுடன் கேட்டுவந்ததால், அவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. நேற்று காலை வரை, சூட்கேஸ் கண்டெக்கப்பட்ட வீட்டிலேயே யாசர் அராபத் இருந்துள்ளார். நேற்று மதியம் துர்நாற்றம் அதிகமாக வீசவே, வீட்டின் பின்பக்கமாக தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, சூட்கேஸ்கள் மீது சிமென்ட் பூசி, தண்ணீர் ஊற்றியிருந்ததும் தெரியவந்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201319:05:29 IST Report Abuse
Saravanan காலம் கெட்டு பொச்சு கடவுளே.......கடவுளே
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
22-பிப்-201309:58:10 IST Report Abuse
BLACK CAT என்ன கொடுமை சாமி ...?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-பிப்-201307:07:06 IST Report Abuse
Lion Drsekar ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ? தினம் தினம் செய்தி வரவேண்டும் என்று இது போன்ற செயல்பாடுகள் நடக்கிறதா அல்லது தினம் ஒரு கொலைக்காக செய்தியா? முன்னால் பல்கலைக் கழக மாணவர் நவராசு? சமீபகாலத்தில் நடைபெற்ற ஆசிரியை கொலை, மாணவர் சீர்திருத்தப்பள்ளி.... பலரின் முகத்தைக்கூட பார்க்க முடிவதில்லை, சிலரின் முகம் மட்டும் அல்ல அவரது குடும்பத்தையே காட்டுகின்றனர் ?? ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.