விபத்தில் இறந்த வாலிபரின் உடலை தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மருத்துவ அதிகாரிகள் பாராமுகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்த வாலிபரின் உடலை தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மருத்துவ அதிகாரிகள் பாராமுகம்

Added : பிப் 22, 2013 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விபத்தில் இறந்த வாலிபரின் உடலை தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மருத்துவ அதிகாரிகள் பாராமுகம்

திண்டுக்கல்:விபத்தில் இறந்த வாலிபர்களின் உடலை, பிரேத பரிசோதனை செய்து தர, திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், இறந்தவரின் உறவினர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்தவர்கள் அருண்பாண்டி, 23, வினோத்குமார், 24. இவர்கள், இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றபோது, நான்கு வழிச்சாலையில் அண்ணாமலையர் மில்ஸ் அருகே கிரேன் லாரி மீது மோதிய விபத்தில்,பலியாகினர். அவர்களது உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், நேற்று காலை 10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள், உடல்களை <உறவினர்களிடம் ஒப்படைக்க, ஒரு உடலுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள், "நாங்கள் விபத்தில் இறந்த செய்தி கேட்டு, அவசரத்தில் புறப்பட்டு வந்ததால், பணம் எடுத்து வர வில்லை. செலவுக்கு ரூ. 400 மட்டுமே உள்ளது,' என்றனர். இதற்கு ஊழியர்கள், "இறந்தவர்கள் உடல் கொடைக்கானல் மலைக்கு செல்லும் வரை கெடாமல் இருக்கும்படி, பிரேதத்தை கட்டுக்கோப்பாக கட்டியுள்ளோம். பணத்தை தந்தால் உடனே உடலை வாங்கி செல்லலாம், இல்லாவிட்டால், ஒரு மணிக்கு மேல் வாருங்கள்,' என்றனர்.தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, ஒரு உடலுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.2 ஆயிரம் கொடுத்தும் மனிதாபிமானம் இல்லாமல் உடலை தர தாமதித்தனர். உறவினர்கள் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, நடந்த விபரத்தை கூறினர். நீண்ட இழுபறிக்கு பின், இரு உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.


அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: பிரேத பரிசோதனையின் போது, என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி வருகிறது. ஆனால், இதுவரை எழுத்து மூலமாக யாரும் புகார் கொடுத்ததில்லை. இறந்தவரின் உறவினர்கள் எங்களிடம் எழுத்து மூலமாக புகார் அளித்தால் தான், நடவடிக்கை எடுப்போம், என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
24-பிப்-201321:24:30 IST Report Abuse
Selvaraj Sennaiappan அவனுங்கள நேரடியா இப்படி திட்டினாலே புத்தி வராது. இந்த பகுதியில் திட்டியா வரப்போகுது. ஒரு வேலை அவனுங்க குடும்பத்தாரை பொது மக்கள் அசிங்கபடுதினால் வைப்பு உள்ளது என்று நம்புவோம்....
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
24-பிப்-201309:16:18 IST Report Abuse
Raju Rangaraj இந்த லட்சணத்தில் நாம் தமிழர்கள் என்கிறோம்தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் இதே கதை தான்பிணத்தின் வாடை அதிகம் என்பதால் எங்களுக்கு பிராந்தி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்கும் அவலம் தொடர்கிறது''போகும் வழியில் பிணத்தின் கட்டுக்கள் அவிழாமல் இருக்க கூடுதலாக கவனியுங்கள் என்ற கோரிக்கையும் வைக்கிறார்கள்விபத்தில் இறந்து வந்த பிணம் ஏற்ன்றால் அதை எடுத்து போக டேக்சிகள் கேட்கும் வாடகை கொடூரமானது ஏழைகள் பாடு என்றும் திண்டாட்டமே தமிழ் வாழ்க என்று பஞ்சாயத்துகளிலும் நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் ஒளிவிளக்கு இருப்பது போல எல்லா பிண பரிசோதனை கூடங்களுக்கு முன்னாலும் பணம் வாழ்கபணமே பிரதானம் என்ற ஒளி விளக்குகளை நிச்சயம் வைக்கலாம்தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
Rate this:
Share this comment
Cancel
v.chandrabose - madurai,இந்தியா
23-பிப்-201323:06:02 IST Report Abuse
v.chandrabose police துறை 50000 -க்கு மேல் லஞ்சம் வாங்கினால் தன் என்பது அரசு மற்றும் துறைகலில் உள்ள தலைவர்குளுக்கும் இரந்தால் தலைக்கு 2000 ரூபாய் பொருந்துமா .
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
23-பிப்-201310:29:24 IST Report Abuse
K.SURIYANARAYANAN மனிதாபிமானம் இல்லையா, இதை போன்ற சம்பவம் உனக்கும் ஓர் நாள் ஏற்படும் நல்லது செய்தால் நல்லது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran - Palani,இந்தியா
23-பிப்-201308:58:50 IST Report Abuse
Eswaran எழுத்து மூலமா ரிப்போர்ட் பண்ணினா அவனுகள வெளிய விட்டுடுவாங்களா?ஒத வாங்காம வரமுடியுமா? ஒரு பொறுப்புள்ள அதிகாரி பேசற பேச்சா இது? இதுல பங்கு யாராருக்கு போகுதோ?அவர்களே தனது குழந்தைகள் இறந்த சோகத்தில் உள்ளனர்.இவர்களிடமும் கை வரிசை காட்டிய இவர்களெல்லாம் மனிதர்கள்தானா?மனிதாபிமானம் என்பது மறைந்து விட்டதா? ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
23-பிப்-201301:27:11 IST Report Abuse
GOWSALYA பிரேதங்களுக்கு நெற்றியில் ஒரு ரூபாயும்,வாய்க்கு அரிசியும் போடுவார்கள் அல்லவா??? அதுபோலத்தான்,இதுவும்......அதுதான் அந்தப் பெற்றோர்கள் கடன் வாங்கியே கொடுத்துவிட்டார்களே.....வெட்கம் கேட்ட ஜென்மங்கள்,பிணத்தை வைத்துகொண்டு வியாபாரம் பேசும் மனிதர்களை நம்நாட்டில் தான் பார்க்கிறேன்......நாளைக்கு நாமும் அதேபாடையில் இருப்போம் என்பதை மறந்துவிடுகிறார்கள் போலும்....?..கடவுள் தான் காப்பாற்றணும்.....
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201315:24:47 IST Report Abuse
 Palanivel Naattaar பிரேதபரிசோதனை என்ற பெயரில் எல்லா மருத்துவ மனைகளிலும் இதுபோன்ற மனிதாபமில்லாத மிருகங்களால் நடைபெறும் சம்பவங்களில் இதுவும் ஒன்று. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - சென்னை,இந்தியா
22-பிப்-201315:09:18 IST Report Abuse
நக்கீரன் என்றாவது ஒருநாள் அவர்களின் வலியை நீங்கள் இழப்பே இல்லாமல் கண்டிப்பாக உணர வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
22-பிப்-201314:30:57 IST Report Abuse
Vaithi Esvaran இந்த பிரபாகரன் மனிதனாக இருந்து இருந்தால் தாமாகவே ஏதாவது முயற்சி எடுத்து இருப்பார். மக்கள் எழுதி கொடுத்து வேலைக்கு வந்தாரா அல்லது மக்கள் எழுதி கொடுத்து மாத மாதம் சம்பளம் வாங்குகிறாரா ? பொறுப்பை தட்டி கழிக்க பொறுப்பில்லாத ஒரு பதில்.ரூபாய் நாலாயிரத்தி இவர் பங்கு எவ்வளவு என்றே யோசிக்க தோன்றுகிறது நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது அரசு இலவச ஆம்புலன்ஸ் நள்ளிரவு தொலைபேசியில் அழைத்தால் கூட சில இடங்களில் நர்சுடன் பத்தே நிமிடங்களுக்குள் வந்து விடுகிறது.இதை பாராட்டத்தான் வேண்டும். இரவு நேரங்களில் நர்ஸ் துணிச்சலுடன் ஆள் அரவமில்லாத தெருக்களில் அம்புலன்சில் பயணிப்பதை பார்க்கும்போது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை தர ஆண்டவனை வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
22-பிப்-201314:18:26 IST Report Abuse
muthu Rajendran லஞ்ச லாவண்யத்தை கட்டுபடுத்த ஆட்சியாளர்கள் முதலில் நேர்மையாளராக இருக்க வேண்டும். இதை நீர் ஊற்றி மரமாய் வளர்த்த பெருமை இரு கழகங்களுக்கும் சேரும்.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .
Rate this:
Share this comment
manikandan - chennai,இந்தியா
23-பிப்-201313:11:59 IST Report Abuse
manikandanஅரசு மாறினாலும் இது மாறாது, முத்து (சென்னை, உட்பட) எல்லா மருத்துவ மனைகளிலும் இதுபோன்ற மனிதாபமில்லாத மிருகங்களால் நடைபெறும் சம்பவங்களில் இதுவும் ஒன்று. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை