"தமிழகத்தில், 15 முக்கிய ரயில் நிலையங்களில், தனியாருடன் ஒப்பந்த அடிப்படையில், துரித உணவகம் துவங்கப்படும்' என, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் - ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், முக்கிய ரயில் நிலையங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் நடத்தப்படுகிறது.தற்போது, தமிழகத்தில்,15 முக்கிய ரயில் நிலையங்களில், தனியார் மூலமாக, ஒப்பந்த அடிப்படையில், துரித உணவகங்களை துவங்க, ஐ.ஆர்.சி.டி.சி., அனுமதி வழங்கிஉள்ளது.
உணவு வகைகள்: இதையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், "புட் சென்டர்' என்ற பெயரில், துரித உணவகம் நேற்று முன்தினம் துவங்கியது. சென்னையில் உள்ள பிரபல உணவகங்களின் உணவுகள், இந்த உணவகத்தில் கிடைக்கும்.இந்த உணவகத்தை, ஐ.ஆர்.சி. டி.சி.,யின், பிராந்திய இயக்குனர் ஸ்ரீராம் துவங்கி வைத்தார். திட்ட மேலாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார்.
புதிய உணவகங்கள் துவங்கப்படுவது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பயணிகளுக்கு தரமான உணவுகள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில், 15 முக்கிய ரயில் நிலையங்களில், புட் சென்டர் என்ற பெயரில், துரித உணவகம் துவங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ட்ரலில் உள்ள துரித உணவகத்தில், பிரபல உணவகங்களின் பிரசித்தி பெற்ற உணவுகள், தனி, தனி கவுண்டர்களில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி வருவாய்:அதிகாலை, 5:00 மணியிலிருந்து, இரவு 11:00 மணி வரை,உணவகம் திறந்திருக்கும். சென்ட்ரல், புட் சென்டர் மூலம், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இது போன்ற துரித உணவகங்கள், சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையம், தாம்பரம், மாம்பலம், திருப்பூர், சேலம், ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிதம்பரம், கும்பகோணம், விழுப்புரம் ரயில் நிலையங்கள் மற்றும் சென்னையில், திருமயிலை, திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி மேம்பால ரயில் நிலையங்களிலும் துவங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.