திருநெல்வேலி:தேவர்குளம் அருகே மோட்டார்பைக்கில் சென்ற பள்ளி மாணவர் மினிலாரி மோதி இறந்தார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.
தேவர்குளம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அசோக்(16). அதே தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் காளிராஜ்(16). இருவரும் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் இருவரும் மோட்டார்பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கை காளிராஜ் ஓட்டினார். அசோக் பின் சீட்டில் இருந்தார். வன்னிக்கோனேந்தல் மின்வாரிய அலுவலகம் அருகே பைக் சென்ற போது நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற மினிலாரி மோதியது.
பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அசோக் அதே இடத்தில் இறந்தார். காளிராஜ் படுகாயமடைந்தார். அவர் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மானூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.