திருநெல்வேலி:நெல்லை அருகே இன்ஜி., கல்லூரி மாணவர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டியதாக சக மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே மூன்றடைப்பில் தனியார் இன்ஜி., கல்லூரி உள்ளது. இங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார்(21), ஆனந்த்(20), மணிகண்ட பிரபு(21) விடுதியில் தங்கி 3ம் ஆண்டு வகுப்பில் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கும், அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் சுரண்டையை சேர்ந்த சிவமணி(20)க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிவமணி, அவர் தரப்பை சேர்ந்த சொக்கம்பட்டி மகேஷ்குமார்(26) ஆகியோர் விடுதிக்கு சென்று ஆனந்தகுமார், மணிகண்ட பிரபு, ஆனந்தை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த மூவரும் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரணை நடத்தி சிவமணி, மகேஷ்குமாரை கைது செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.