"முடக்கப்பட்ட' நில அபகரிப்பு வழக்குகள்: சிறப்பு கோர்ட் மீண்டும் திறக்கப்படுமா? | Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்கள், கடந்த ஏழு மாதங்களாக, முடங்கிக் கிடக்கின்றன.கடந்த ஆட்சி காலத்தில், தமிழகத்தில் நில விற்பனை வெகு ஜோராக நடந்தது. இதில், தனியாருக்கு சொந்தமான, பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் மற்றும், பராமரிப்பில்லாத நிலங்கள் விற்கப்பட்டன.
அரசியல்வாதிகள்:தவிர, சில அரசியல்வாதிகளும், நில ஆக்கிரமிப்பாளர்களும், தரிசாக, கேட்பாரற்று கிடந்த, அரசுக்கு சொந்தமான நிலங்களையும், சொந்தமாக்கிக் கொண்டனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல் நடவடிக்கையாக, அரசியல்வாதிகள் அபகரித்த அரசு நிலங்கள் மற்றும் அடாவடியால் வாங்கப்பட்ட விவசாய பூமிகளை, மீண்டும் நில உரிமையாளர்களுக்கே வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக, தமிழகத்தில் சிறப்பு போலீஸ் படை மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு கோர்ட்கள் துவக்கப்பட்டன.கோவை,

திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், அதிக பரப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்நடவடிக்கையில், பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர், நடவடிக்கைக்கு பயந்து, நிலங்களை, உரியவர்களுக்கே திருப்பிக் கொடுத்தனர்.
கடந்த ஆண்டு, ஜூலை, 20ம் தேதி, கோவை, திருப்பூர்,ஈரோடு உட்பட, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு கோர்ட்கள் திறக்கப் பட்டன; நீதிபதிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட இருந்த நிலையில், இக்கோர்ட்களில் விசாரிப்பதற்கான வழக்குகள் பெறப்பட்டன.

விசாரணை:ஒவ்வொரு கோர்ட்டிலும், குறைந்தது, 700 கோடி ரூபாய் மதிப்புள்ள, பல நூறு ஏக்கர் பாசன மற்றும் வறட்சி நிலங்கள் அபகரிக்கப்பட்டது

Advertisement

இதைத் தொடர்ந்து, கடந்த ஏழுமாதங்களாக, தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு கோர்ட்களின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. கோர்ட்டில் உள்ள எந்த வழக்குகளையும் விசாரிக்க முடியாதபடி, "உள்ளது உள்ளபடியே' தொடரும் வகையில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannanazhagu - karaikkudi,இந்தியா
23-பிப்-201314:11:38 IST Report Abuse
kannanazhagu அய்யோ அய்யோஇதெல்லாம் சும்மா தமாசுக்குங்கஉண்மைனு நினைச்சிங்களா. பழைய ஆட்சிக்காரங்கள மிரட்டத்தானுங்க.இப்ப எல்லாம் ஓகே ஆயிடுச்சுங்க.பின்ன எதுக்குங்க கோர்ட் கீர்ட்டுன்னு.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201316:31:13 IST Report Abuse
Mohanadas Murugaiyan கடந்த முறை இவர்கள் ஆட்சியில் கருணாநியை நள்ளிரவில் கைது செய்து வழக்கு போட்டது நினைவிருக்கிறதா....???எந்த நீதிமன்றத்தில் அது நடக்கிறது என்று யாருக்காவது தெரியுமா...??? அடிப்படையே இல்லாமல் மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவதற்காக மட்டும் வழக்கு போட்டால் இப்படித்தான் ஆகும்.
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
22-பிப்-201310:38:15 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் திமுக சொல்வது ஐந்து பைசா பிக்பாக்கெட் பண்ணினால் கிரிமினல் குற்றம். ஆனால் ஐந்து கோடி நிலத்தை அபகரித்தால் அது சிவில் வழக்கு. ஆகமொத்தம் சிவிலா கிரிமினலா என்பது திருடப்பட்ட பொருளின் மதிப்பைப் பொறுத்ததாம்
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-பிப்-201309:47:24 IST Report Abuse
மதுரை விருமாண்டி நோண்டிப் பார்த்ததில், ஆளுகட்சியினரின் கைவரிசை தான் களி கட்டி நின்றதாம்.. அதனால் தான் நில அபகரிப்பு வழக்கெல்லாம் கோர்ட்டுக்கு வராமல், கட்டைப் பஞ்சாயத்துக்கு சென்றதாம்.. வசூல் திரண்டு வரும் போது உண்டியலை உடைக்க முடியுமா ?? மம்மியின் கழக கஜானாவிற்கு கமிஷன் வரும் போது இதெல்லாம் கோர்ட்டுக்கு ஏன் போகவேண்டும் என்ற நல்ல எண்ணம் தான்..
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
22-பிப்-201306:22:53 IST Report Abuse
s.maria alphonse pandian உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியலுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் இனி பாராளுமன்ற தேர்தலின் போது உயிர் பெறும்....மீண்டும் பழி வாங்க...
Rate this:
6 members
0 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.