Advertisement
காஸ் குழாய் பதிக்க எதிர்ப்பு: சேலத்தில் முற்றுகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013,03:02 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 22,2013,03:44 IST

கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் காஸ் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், சேலம் கெயில் நிறுவனத்தை முற்றுகை செய்யும் போõட்டம் வரும், 25ம் தேதி நடக்கிறது.தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொது செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:கேரள மாநிலம் கொச்சி முதல் கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை இந்திய அரசின் பொது நிறுவனமான கெயில் மூலம் தமிழகத்தில், 375 கி.மீ.,நீளமுள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த காஸ் செல்லும் குழாயை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்ட சிறு மற்றும் குறுவிவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களில் காஸ் குழாய் பதிப்பது சம்மந்தமாக விவசாயிகளுக்கு முறையான தகவல்களை தெரிவிக்காமல் போலீஸாரை கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விவசாயிகள் மற்றும் காஸ் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தினரை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் காஸ் குழாயை, தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டியும், இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் வரும், 25ம் தேதி சேலம் கெயில் நிறுவன அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் முற்றுகை செய்யும் போராட்டம் நடக்கிறது.
போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், விவசாயிகளும் பெரும்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.