பெரம்பலூர்: ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலரின் காரை திருடி சென்ற மர்ம நபர்களை, பெரம்பலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
புது பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு,
67. ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது
ஆம்னி காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, வீட்டில் தனது மனைவி மற்றும்
குடும்பத்தாருடன் தூங்கினார்.
நள்ளிரவில் அய்யாக்கண்ணு வீட்டை
வெளிப்புறமாக தாளிட்டுவிட்டு, மர்மநபர்கள் போர்டிகோவில் நிறுத்தி இருந்த
ஆம்னி திருடிச் சென்றனர். நேற்று காலை அய்யாக்கண்ணு எழுந்து கதவை திறக்க
முடியாததால், அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். பின்பு கதவு
திறக்கப்பட்டு வெளியேவந்து பார்த்தபோது, கார் கடத்தி சென்றிருந்தது
தெரியவந்தது. இவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு செயல்படும்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும் கொள்ளை முயற்சி
நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அய்யாக்கண்ணு மற்றும் குடிநீர்
வடிகால் வாரிய அதிகாரியும் தனித்தனியே கொடுத்த புகாரின்படி, பெரம்பலூர்
போலீஸார் வழக்கு பதிந்து, காரை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.