அரியலூர்: அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை முற்றிலும் கைவிட வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிட வேண்டும். நடப்பில் உள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நம்பிராஜன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தங்கமணி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் நல்லப்பன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாமிதுரை, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுசெயலாளர் இளம்பரிதி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசிய ஆர்ப்பாட்டத்தை, ஐபெட்டோ அமைப்பின் அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை முடித்து வைத்து பேசினார். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.