Advertisement
ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு 17,261 மாணவர் பங்கேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013,03:11 IST

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், ஒன்றாம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 261 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள், 7,811 பேர், மாணவிகள், 9,450 பேர். இதற்காக மாவட்டத்தில், 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்தடையை சமாளிக்கும் விதமாக, ஜெனரேட்டர் வசதிகள் ஏற்படுத்துமாறு, தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தேர்வு மையங்களை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் ஏதுவாக, முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய 15 பறக்கும்படைகள், 2 தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளது. தேர்வு நாட்களில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாடவாரியாக பிரித்து, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் உள்ள, 4 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 21 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள், 11 ஆயிரத்து, 833 பேர், மாணவிகள், 12 ஆயிரத்து, 188 பேர். இதற்காக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 44 தேர்வு மையங்கள், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில், 45 தேர்வு மையங்கள் என, மாவட்டம் முழுவதும், 89 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.