மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே 5 பேரை அடித்துக் கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை பெற்றவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பதால், தண்டனையை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. பொன்னமராவதி மருதுபாண்டியன், மனைவி விஜயபாமா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்துடன் திருப்பூரில் வசித்தனர். கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு, விஜயபாமா சென்றுவிட்டார். மருது போதைக்கு அடிமையானார். மேலைசிவபுரியில் தங்கினார். வேலையின்றி, பிறரிடம் கையேந்தும் நிலைக்கு ஆளானார்; மனநிலை பாதிக்கப்பட்டது. மேலைசிவபுரியில் சிலரிடம் பணம் கேட்டு, மருது தகராறில் ஈடுபட்டார். கடந்த 2009 ஜூன் 19 ல், அப்பகுதியினர் வலுக்கட்டாயமாக மருதுவை பஸ்சில் ஏற்றி, திருப்பூருக்கு அனுப்பினர். அடுத்த ஸ்டாப்பில் கீழே இறங்கி, ஊருக்குள் வந்த மருது, கட்டையால் பொதுமக்களை தாக்கினார். இதில் சுகுமாரி, சரோஜா, கோபால், அழகன், மணிச்செட்டியார் இறந்தனர்.புதுக்கோட்டை செஷன்ஸ் கோர்ட், 2012 ஜன.,23 ல், மருதுவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதை ரத்து செய்ய மருது, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.அசோக்குமார்ராம் ஆஜரானார். நீதிபதிகள் உத்தரவு: சம்பவத்திற்கு பின், மருதுவிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், அவர் விசாரணையை சந்திக்கும் மனநிலையில் உள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் மனச்சிதைவு (பேரனைடு சிசோபெரனியா) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும் எனவும் மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. இவரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. கீழ் கோர்ட் விதித்த தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மருதுவை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் கீழ், திருமயம் கோர்ட் விசாரிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.