மதுரை: மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்த அட்டாக் பாண்டியின் உறவினர் விஜய்பாண்டி மற்றும் அவரது நண்பர், விசாரணைக்கு பின், சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜன.,31 ல், மதுரை சத்யசாய்நகரில், பொட்டு சுரேஷ், கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை 4 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. இதுதொடர்பாக, பிப்., 2ல் திண்டுக்கல் நத்தம் கோர்ட்டில் சரணடைந்த, மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபா ரத்தினம், 25, சந்தானம், 24, ராஜா என்ற ஆசா முருகன், 24, லிங்கம், 25, சேகர், 24, செந்தில், 24, கார்த்திக், 24, சேலம் சிறையில் உள்ளனர்.தலைமறைவான அட்டாக் பாண்டி சகோதரி மகன் விஜய்பாண்டி, அவரது நண்பர் ஆரோக்கியபிரபு, சில நாட்களுக்கு முன் சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர். 4வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கடந்த மூன்று நாள் போலீஸ் விசாரணைக்கு பின், நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மாஜிஸ்திரேட் ராஜலிங்கம், அவர்களை சேலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.